வியாழன், 19 பிப்ரவரி, 2009

பிடித்தவை…நிலவின் வெளிச்சம் பிடிக்கும்
இரவில் குளுமைப் பிடிக்கும்
மழையில் நனைதல் பிடிக்கும்
வீசும் தென்றல் பிடிக்கும்!

நிறத்தில் கருமைப் பிடிக்கும்
தமிழின் இனிமைப் பிடிக்கும்
பூவில் ரோஜா பிடிக்கும்
பகலில் கனவு பிடிக்கும்!

இயற்கை அழகு பிடிக்கும்
ஊரைச் சுற்ற பிடிக்கும்
தோழர் தோழி பிடிக்கும்
இளமைப் பருவம் பிடிக்கும்!

கதைகள் படிக்கப் பிடிக்கும்
அரட்டை அடிக்கப் பிடிக்கும்
சோகப் பாடல் பிடிக்கும்
காதல் கவிதைப் பிடிக்கும்!

நல்ல ரசிகன் பிடிக்கும்
உண்மை நட்பு பிடிக்கும்
கண்ணில் கருணைப் பிடிக்கும்
பேச்சில் இனிமைப் பிடிக்கும்!

தாயின் பாசம் பிடிக்கும்
அண்ணன் அன்பு பிடிக்கும்
உண்மை மனிதன் பிடிக்கும்
கவிதை ரொம்பெ பிடிக்கும்!

24 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

அட நிஜமா சொல்றேன்

மிகவும் சந்தோஷமா உணர்கிறேன்

உங்க தலைப்பிலேயே ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\சோகப் பாடல் பிடிக்கும்\\

தெரியுமே ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நல்ல ரசிகன் பிடிக்கும்
உண்மை நட்பு பிடிக்கும்\\

நிறைய இருக்கோம் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கவிதை ரொம்பெ பிடிக்கும்!\\

இதுவும் தெரியும்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நிறத்தில் கருமைப் பிடிக்கும்
தமிழின் இனிமைப் பிடிக்கும்\\

இதுக்கு என்ன சொல்ல ...

(கருப்புதான் எனக்கு புடிச்ச ...)

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இயற்கை அழகு பிடிக்கும்
ஊரைச் சுற்ற பிடிக்கும்
தோழர் தோழி பிடிக்கும்
இளமைப் பருவம் பிடிக்கும்!\\

அழகு அழகு ...

நட்புடன் ஜமால் சொன்னது…

உங்கள் கதைகள் பிடிக்கும்
உங்கள் சோகமும் பிடிக்கும்
உங்கள் விரக்த்தியும் பிடிக்கும்

மொத்தத்தில்

உங்கள் கவிதை பிடிக்கும்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\உங்கள் சோகமும் பிடிக்கும்
உங்கள் விரக்த்தியும் பிடிக்கும்\\

நமக்குள்ளும் பல நேரங்களில் வருவதால்.

மற்றபடி இதெல்லாம் வேண்டாம் என்று தான் தோன்றும்.

புதியவன் சொன்னது…

நீங்க குறிப்பிட்டுள்ளதில் ஒரு சிலவற்றை தவிர மற்றவை எனக்கும் பிடித்தவையே...நீங்க இருபத்து நான்கு வரிகள் எழுதியிருக்கிறீர்கள்...நான் முன்னூறு வரிகளில் எழுதியிருக்கிறேன்...அவ்வளவுதான் வித்தியாசம்...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நீங்க இருபத்து நான்கு வரிகள் எழுதியிருக்கிறீர்கள்...நான் முன்னூறு வரிகளில் எழுதியிருக்கிறேன்...அவ்வளவுதான் வித்தியாசம்...\\

எப்போ போட போறீங்க ...

சீக்கிரம் அண்ணே ...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் ஜமால்,
உங்கள் அனைத்துக் கருத்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நட்புடன் ஜமால் கூறியது...
//உங்கள் கதைகள் பிடிக்கும்
உங்கள் சோகமும் பிடிக்கும்
உங்கள் விரக்த்தியும் பிடிக்கும்

மொத்தத்தில்

உங்கள் கவிதை பிடிக்கும்.//

அப்படியா? மிக்க மகிழ்ச்சி.

நட்புடன் ஜமால் கூறியது...
\\உங்கள் சோகமும் பிடிக்கும்
உங்கள் விரக்த்தியும் பிடிக்கும்\\

//நமக்குள்ளும் பல நேரங்களில் வருவதால்.

மற்றபடி இதெல்லாம் வேண்டாம் என்று தான் தோன்றும்.//

இன்பமும் துன்பமும் கலந்ததுதானே மனித வாழ்க்கை. வேண்டாம் என்று நினைத்தால் அவை நம்மை விட்டு ஒதுங்கிவிடுமா என்ன?

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//நீங்க குறிப்பிட்டுள்ளதில் ஒரு சிலவற்றை தவிர மற்றவை எனக்கும் பிடித்தவையே...நீங்க இருபத்து நான்கு வரிகள் எழுதியிருக்கிறீர்கள்...நான் முன்னூறு வரிகளில் எழுதியிருக்கிறேன்...அவ்வளவுதான் வித்தியாசம்...//

ஜமால் கேட்டதையே நானும் கேட்கிறேன். எப்போது பதிவிடப் போகிறீர்கள் நண்பரே? உங்களுக்குப் பிடித்தவற்றை நாங்களும் அறிந்துக்கொள்கிறோமே?

புதியவன் சொன்னது…

//து. பவனேஸ்வரி சொன்னது…
ஜமால் கேட்டதையே நானும் கேட்கிறேன். எப்போது பதிவிடப் போகிறீர்கள் நண்பரே? உங்களுக்குப் பிடித்தவற்றை நாங்களும் அறிந்துக்கொள்கிறோமே?//

விரைவில் பதிவிடுகிறேன்...நன்றி ஜமால்...நன்றி து. பவனேஸ்வரி...

தேவன் மாயம் சொன்னது…

நிறத்தில் கருமைப் பிடிக்கும்//

இது ஒன்னே போதும் அருமைங்க!!

தேவன் மாயம் சொன்னது…

ஊரைச் சுற்ற பிடிக்கும்
தோழர் தோழி பிடிக்கும்
இளமைப் பருவம் பிடிக்கும்!///

ஆஹா! ஆஹா
பிடிக்காதது என்னன்னு ஒரு கவிதை எழுதுங்க..

தேவன் மாயம் சொன்னது…

உங்கள் கதைகள் பிடிக்கும்
உங்கள் சோகமும் பிடிக்கும்
உங்கள் விரக்த்தியும் பிடிக்கும்
//
பின்னீட்டிங்க!

து. பவனேஸ்வரி சொன்னது…

thevanmayam கூறியது...
//ஊரைச் சுற்ற பிடிக்கும்
தோழர் தோழி பிடிக்கும்
இளமைப் பருவம் பிடிக்கும்!///

ஆஹா! ஆஹா
பிடிக்காதது என்னன்னு ஒரு கவிதை எழுதுங்க..//

முயற்சிக்கிறேன் நண்பரே. கருத்துக்கு நன்றி.

அப்துல்மாலிக் சொன்னது…

உங்கள் எழுத்துப்பிடிக்கும்
உங்கள் எதுகை மோனையுடைய கவிதை பிடிக்கும்
உங்கள் தொடர்கதை பிடிக்கும்
உங்கள் எழுத்திலுள்ள கணைகள் பிடிக்கும்

நிறைய பிடிக்கும்

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\
இன்பமும் துன்பமும் கலந்ததுதானே மனித வாழ்க்கை. வேண்டாம் என்று நினைத்தால் அவை நம்மை விட்டு ஒதுங்கிவிடுமா என்ன?\\

ஒதுங்காதுதான் ...

ஆனாலும் வேண்டாம் என்று நினைப்பு வருது தானே ...

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//உங்கள் எழுத்துப்பிடிக்கும்
உங்கள் எதுகை மோனையுடைய கவிதை பிடிக்கும்
உங்கள் தொடர்கதை பிடிக்கும்
உங்கள் எழுத்திலுள்ள கணைகள் பிடிக்கும்

நிறைய பிடிக்கும்

வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே... :)

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\
இன்பமும் துன்பமும் கலந்ததுதானே மனித வாழ்க்கை. வேண்டாம் என்று நினைத்தால் அவை நம்மை விட்டு ஒதுங்கிவிடுமா என்ன?\\

//ஒதுங்காதுதான் ...

ஆனாலும் வேண்டாம் என்று நினைப்பு வருது தானே ...//

நினைப்பு வரத்தான் செய்கிறது. அதை ஒதுக்கும் வழிதான் தெரியவில்லை.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நினைப்பு வரத்தான் செய்கிறது. அதை ஒதுக்கும் வழிதான் தெரியவில்லை.\\

உண்மைதான்

நான் சொன்னது…

பிடித்தவை எல்லாம் சொல்லிவிட்டீர்கள் எது பிடிக்காது? இன்னும் சொல்லவில்லையே வாழ்த்துக்கள் கவிதை நன்று

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//பிடித்தவை எல்லாம் சொல்லிவிட்டீர்கள் எது பிடிக்காது? இன்னும் சொல்லவில்லையே வாழ்த்துக்கள் கவிதை நன்று//

விரைவில் கூறுகிறேன்...கருத்துக்கு நன்றி ஐயா...