வியாழன், 19 பிப்ரவரி, 2009

இருவர் 11 (மேடை நாடகம்)

விவாகரத்து! நமது இந்திய சமூகத்திடையே அதிகரித்துவரும் ஒரு சமூதாய சீர்கேடாகும். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், இந்நவீன காலத்தில் திருமண வாழ்க்கையே நரகமாகிக் கொண்டிருக்கிறது.

ஆயிரங்காலத்துப் பயிர் என்பர் திருமணத்தை. அத்தகையப் பயிரானது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாகி இன்று அடிக்கும் சூறாவளியில் சிதைந்துப் போகிறது.

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி வழக்கில் உண்டு. இன்றோ நிலமைத் தலைகீழாகி தொட்டதெற்கெல்லாம் விவாகரத்துக் கேட்கும் பழக்கம் நம்மிடையே வந்துவிட்டது.

விவாகரத்துப் பெருகுவதற்கான காரணங்கள் யாவை, அதனை எவ்வாறு களையலாம் என்பதனைத் தாங்கி வருவதே இருவர் 11 மேடை நாடகம். இயக்குனர் எஸ்.தி.பாலா அவர்களின் மற்றுமொரு சிறந்த படைப்பு இந்நாடகம்.

இந்நாடகம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதியிருந்து 7-ஆம் திகதி வரை தலைநகரில் அமைந்திருக்கும் கலாச்சார மாளிகையில் (இஸ்தானா புடாயா) நடைப்பெறவிருக்கிறது. 21 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்நாடகத்தைக் காண இயலும்.

தமிழ் மற்றும் கலை ஆர்வலர்கள் அனைவரும் இந்நாடகத்தைக் காண அழைக்கப்படுகின்றனர். நாடகத்திற்கான நுழைவுச் சீட்டுகள் மலேசிய ரிங்கிட் 20 மற்றும் 30 வெள்ளிகளில் கிடைக்கும். மாணவர்களுக்கு 50% கழிவும் வழங்கப்படுகிறது.


நாடகம் அரங்கேறும் நாள்:
3-7 மார்ச் 2009 @ 8.31 (இரவு)
7-8 மார்ச் 2009 @ 3.00 (மாலை)

10 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வர இயலுமா என்று தெரியவில்லை

தங்கள் எழுத்துக்களில் பதியுங்கள், பகிருங்கள்

படித்து உணர முயல்கிறேன் ...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
//வர இயலுமா என்று தெரியவில்லை

தங்கள் எழுத்துக்களில் பதியுங்கள், பகிருங்கள்

படித்து உணர முயல்கிறேன் ...//

கண்டிப்பாக... நாடகம் முடிந்த பிறகு அதனைப் பற்றி விரிவானச் செய்தி தொகுப்பினை வெளியிடுகிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நீங்க நடிச்சா நாடகம் கண்டிப்பா நல்லாதான் இருக்கும். வருவதற்கான வாய்ப்புகள் கிட்டுமாயின் நிச்சயம் வருகிறேன்.

//21 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்நாடகத்தைக் காண இயலும்.//

:(( இப்படி தடை போட்டுட்டிங்க... நான் வந்தா உள்ளவிடுவாங்களானு தெரியலையே...

து. பவனேஸ்வரி சொன்னது…

VIKNESHWARAN கூறியது...
//நீங்க நடிச்சா நாடகம் கண்டிப்பா நல்லாதான் இருக்கும். வருவதற்கான வாய்ப்புகள் கிட்டுமாயின் நிச்சயம் வருகிறேன்.

//21 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்நாடகத்தைக் காண இயலும்.//

:(( இப்படி தடை போட்டுட்டிங்க... நான் வந்தா உள்ளவிடுவாங்களானு தெரியலையே...//

வாய்ப்புகளை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் நண்பரே. வருவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன். உங்களுக்கு வயது குறைவென்று சொல்லவே இல்லையே? இன்னும் பால் போத்தல் தானா? ஹிஹிஹி...

அப்துல்மாலிக் சொன்னது…

நாடகத்தி கோர்வையாக தொடரிடலாமே
எங்களை மாதிரி ரொம்ப தூரத்திலுள்ளவர்கள் படித்து பயன்பெறலாம்

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//நாடகத்தி கோர்வையாக தொடரிடலாமே
எங்களை மாதிரி ரொம்ப தூரத்திலுள்ளவர்கள் படித்து பயன்பெறலாம்//

முயற்சிக்கிறேன் நண்பரே. முதலில் நாடகம் முடியட்டும்... :)

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நீங்க நடிச்சா நாடகம் கண்டிப்பா நல்லாதான் இருக்கும். \\

நீங்களுமா ...

நான் சொன்னது…

நான் சென்னையில் இருக்கிறேன். வர இயலாது ஆகவே மன்னிக்கவும். நீங்கள் கலந்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\நீங்க நடிச்சா நாடகம் கண்டிப்பா நல்லாதான் இருக்கும். \\

//நீங்களுமா ...//

ஏங்க? நாங்க நடிக்கக் கூடாதா?

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//நான் சென்னையில் இருக்கிறேன். வர இயலாது ஆகவே மன்னிக்கவும். நீங்கள் கலந்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.//

பரவாயில்லை நண்பரே. நாடகம் வெற்றிப்பெற்றால் சென்னையிலும் அரங்கேற்றம் காணும். எல்லாம் இறைவன் செயல். நாடகம் முடிந்தவுடன் அதனைப் பற்றி மேலும் விரிவாக எழுதுகின்றேன்.