வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

காத்திருக்கிறேன்…


சோகங்களே
வாழ்க்கையாகிவிட்டது
ஏனென்றுத் தெரியவில்லை
காரணம் புரியவில்லை
விடைக்காண துடிக்கிறேன்
விடைத்தருவோர் யாருமில்லை!

மேகங்கள் சுமையானால்
மொழிந்துவ்டுகிறது வானம்
உடல்கள் சுமையானால்
பிரிந்துவிடுகிறது உயிர்
மனம் சுமையானால்
என்ன செய்வது?

மனதில் தோன்றும் ஆசைக்கு
அளவே இல்லை – அதை
நிறைவேற்றி வைப்பதற்கு
ஆளே இல்லை
ஆறுதல் கூறுவதற்கும்
எவரும் இல்லை!

கண்மூடிப் பார்க்கிறேன்
ஒரே இருள்
கண் திறப்பதற்கோ
ஒரே பயம்
உலகைக் கண்டு
என் மனம் அஞ்சுகிறது
சோகத்தை மறக்க
நெஞ்சு துடிக்கிறது!

மறக்கிறேன் மறக்கிறேன்
மறக்க முடியவில்லை
தவிர்க்கிறேன் தவிர்க்கிறேன்
தவிர்க்க முடியவில்லை
நிம்மதியைத் தேடினேன்
அதுவும் கிடைக்கவில்லை!

அழுது அழுது
கண்ணீரும் வற்றிவிட்டது
துடைத்து விடுவதற்கு
விரல்களும் மறுத்துவிட்டது!

இன்று,
வாடிய ரோஜாவாக நான்
தண்ணீர் வார்ப்பதற்கும்
எவரும் இல்லை…
இன்னமும் காத்திருக்கிறேன்
உதிரும் நாட்களுக்காக!

13 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\சோகங்களே
வாழ்க்கையாகிவிட்டது
ஏனென்றுத் தெரியவில்லை
காரணம் புரியவில்லை
விடைக்காண துடிக்கிறேன்
விடைத்தருவோர் யாருமில்லை!\\

நிச்சியம் விடியும்

விடையை வெளியில் தேடாதீர்கள்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\மேகங்கள் சுமையானால்
மொழிந்துவ்டுகிறது வானம்
உடல்கள் சுமையானால்
பிரிந்துவிடுகிறது உயிர்
மனம் சுமையானால்
என்ன செய்வது?\\

மிக அருமை.

நட்புடன் ஜமால் சொன்னது…

மனதில் தோன்றும் ஆசைக்கு
அளவே இல்லை\\

இதுவே எல்லா சோகங்களுக்கும் காரணம்

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆறுதல் கூறுவதற்கும்
எவரும் இல்லை!\\



உங்கள் எழுத்துக்கள் எங்களுக்கே ஆதரவாய் இருக்கும் பொழுது

உங்களுக்கு ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\மறக்கிறேன் மறக்கிறேன்
மறக்க முடியவில்லை
தவிர்க்கிறேன் தவிர்க்கிறேன்
தவிர்க்க முடியவில்லை
நிம்மதியைத் தேடினேன்
அதுவும் கிடைக்கவில்லை!\\

எழுத்துக்களில் எண்ணங்களை பிரிதிபலிக்க கற்றுக்கொடுங்களேன்

கற்பவன் தானே நான் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அழுது அழுது
கண்ணீரும் வற்றிவிட்டது
துடைத்து விடுவதற்கு
விரல்களும் மறுத்துவிட்டது!\\

ஏற்கனவே எழுதினீர்களோ இவ்வரிகளை

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இன்று,
வாடிய ரோஜாவாக நான்
தண்ணீர் வார்ப்பதற்கும்
எவரும் இல்லை…
இன்னமும் காத்திருக்கிறேன்
உதிரும் நாட்களுக்காக!\\

ஓஹ்!

அருமை அருமை.

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\மறக்கிறேன் மறக்கிறேன்
மறக்க முடியவில்லை
தவிர்க்கிறேன் தவிர்க்கிறேன்
தவிர்க்க முடியவில்லை
நிம்மதியைத் தேடினேன்
அதுவும் கிடைக்கவில்லை!\\

//எழுத்துக்களில் எண்ணங்களை பிரிதிபலிக்க கற்றுக்கொடுங்களேன்

கற்பவன் தானே நான் .../

எப்படிக் கற்றுக்கொடுப்பது நண்பரே. அதுவாக வருகின்றது. நானும் கற்கவில்லை; கற்றுக்கொடுக்கவும் தெரியவில்லை.

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\அழுது அழுது
கண்ணீரும் வற்றிவிட்டது
துடைத்து விடுவதற்கு
விரல்களும் மறுத்துவிட்டது!\\

//ஏற்கனவே எழுதினீர்களோ இவ்வரிகளை//

இருக்கலாம். ஒரே மாதிரியான உணர்ச்சிகளே தோன்றும் போது வரிகள் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. உங்கள் அனைத்துக் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே.

புதியவன் சொன்னது…

//கண்மூடிப் பார்க்கிறேன்
ஒரே இருள்
கண் திறப்பதற்கோ
ஒரே பயம்
உலகைக் கண்டு
என் மனம் அஞ்சுகிறது//

பயப்படமல் கண்ணைத் திறந்து பாருங்க...உலகில் நல்லவைகளும் இருக்கத்தான் செய்கின்றன...

//மொழிந்துவ்டுகிறது வானம்//

”பொழிந்து விடுகிறது வானம்”

நான் சொன்னது…

ஏன் இவ்வளவு வலிகளுடன் ஒரு கவிதை எல்லாம் சரியாய் போகும்.
கவலை வேண்டாம் ஆனாலும் கவிதை மிகவும் நன்று வாழ்த்துகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//கண்மூடிப் பார்க்கிறேன்
ஒரே இருள்
கண் திறப்பதற்கோ
ஒரே பயம்
உலகைக் கண்டு
என் மனம் அஞ்சுகிறது//

பயப்படமல் கண்ணைத் திறந்து பாருங்க...உலகில் நல்லவைகளும் இருக்கத்தான் செய்கின்றன...

//மொழிந்துவ்டுகிறது வானம்//

”பொழிந்து விடுகிறது வானம்”//

நல்லவைகளைக் காண்பது அரிதாக இருக்கிறதே? திருத்தத்திற்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//ஏன் இவ்வளவு வலிகளுடன் ஒரு கவிதை எல்லாம் சரியாய் போகும்.
கவலை வேண்டாம் ஆனாலும் கவிதை மிகவும் நன்று வாழ்த்துகள்//

வலிக்கும் போதுதான் கவிதை ஊற்றெடுக்கிறது ஐயா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.