வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

தேடல்…


பிறக்கும் போது
அழ ஆரம்பித்தேன்
இன்னும் தொடர்கிறது
இது தொடர்கதையா
அல்லது புரியாத புதிரா
எனக்கே தெரியவில்லை!

அன்று அழுதபோது
பாலூட்டி ஆதரித்தார்கள்
இன்று அழும் போது
எட்டி உதைக்கிறார்கள்
அன்று அழுதேன் பசிக்காக
இன்று அழுகிறேன் அன்புக்காக!

அன்பு செலுத்த யாருமில்லை
பாசமூட்ட எவரும் இல்லை
ஆறுதல் சொல்ல ஒருவருமில்லை
கண்களில் வழிந்தோடும்
கண்ணீரைத் துடைக்கும்
விரல்கள் இல்லை!

இன்னமும் ஏங்குகிறேன்
அன்பு கிடைக்காதா என்று
உலகெங்கும் அலைகிறேன்
உண்மை நேசத்தைத் தேடி
தேடல் தொடர்கிறது
தேடிய பொருள்தான்கிடைக்கவில்லை!

14 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ஏதுவும் கிடைக்காதா என்று ஏங்குவதைவிட

அப்படி ஏங்கும் ஒருவருக்கு கொடுக்கலாமே ...

pudugaithendral சொன்னது…

தேடல் தொடர்கிறது
தேடிய பொருள்தான்கிடைக்கவில்லை!//

அந்த அன்பு உங்களிடம் நிறைய இருக்குமே அதை பகிர்ந்து கொண்டால் பன்மடங்கு திரும்ப கிட்டும். என் அனுபவம்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கண்களில் வழிந்தோடும்
கண்ணீரைத் துடைக்கும்
விரல்கள் இல்லை\\

எத்தனையோ கண்களில் கண்ணீர் இரத்த வாடையோடு

விரல்கள் இல்லாமல் தவிக்கின்றன

நீங்களும் துடைத்திடுங்கள்

நட்புடன் ஜமால் சொன்னது…

உங்கள் கண்ணீர் காணாமல் போய் விடும அடுத்தவருக்கு செய்யும் போது.

நட்புடன் ஜமால் சொன்னது…

கொடுக்க கொடுக்க பெறுகும் ...

கொடுப்போம் கொடுப்போம் ... கொடுத்துக்கொண்டே இருப்போம்

இறப்பு வந்து சேரும் வரை ...

நட்புடன் ஜமால் சொன்னது…

நமக்கு யார் தருவார் ஆறுதல் ...

நமக்கு யார் தருவார் அன்பு ...

இதெல்லாம் போகட்டும்

நாம் கொடுப்போம், திரும்ப கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல்

ஆதவா சொன்னது…

அன்று தெரியாமல் அழுதீர்கள்.,.. இன்று தெரிந்து அழுகிறீர்கள்.. அதுதான் வித்தியாசம்.. அன்புக்காக அழுகக் கூடாதுங்க.. அன்புக்காக ஏங்கணும் ; அப்ப யாரும் எதுவும் செய்யமுடியாதுல்ல.... ஏன்னா, உலகத்தில அன்பு செலுத்த ஏகப்பட்ட இடங்கள் இருக்கு...

என் தோழி ஒருத்தியின் கையெழுத்து :

எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்?
நான் உன்னருகில் இருக்க....


நீங்கள் இல்லாத இடத்தில் தேடுகிறீர்கள்...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி.

//நமக்கு யார் தருவார் ஆறுதல் ...

நமக்கு யார் தருவார் அன்பு ...

இதெல்லாம் போகட்டும்

நாம் கொடுப்போம், திரும்ப கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல்//

எதிர்ப்பார்ப்புதான் அனைத்துத் துன்பங்களுக்கும் அஸ்திவாரம். மிக அழகாகக் கூறியிருக்கிறீர்கள். நன்றி.

//புதுகைத் தென்றல் கூறியது...
தேடல் தொடர்கிறது
தேடிய பொருள்தான்கிடைக்கவில்லை!//

அந்த அன்பு உங்களிடம் நிறைய இருக்குமே அதை பகிர்ந்து கொண்டால் பன்மடங்கு திரும்ப கிட்டும். என் அனுபவம்//

உண்மைதான். எதையும் கொடுத்தால்தானே திரும்பப் பெற முடியும். கருத்துக்கு நன்றி புதுகைத் தென்றல் அவர்களே.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் ஆதவா,

//என் தோழி ஒருத்தியின் கையெழுத்து :

எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்?
நான் உன்னருகில் இருக்க....

நீங்கள் இல்லாத இடத்தில் தேடுகிறீர்கள்...//

அருமையான வரிகள். உங்கள் தோழிக்கு எமது வாழ்த்தினைத் தெரிவித்துவிடுங்கள். நான் மட்டும் அல்ல நண்பரே, இன்னும் பலரின் தேடல் முற்றுப் பெறாமல்தான் இருக்கிறது. கருத்துக்கு நன்றி.

புதியவன் சொன்னது…

கவிதை உணர்வுப் பூர்வமாக உள்ளது...
அன்பு கிடைக்கும்வரை தேடல் தொடரட்டும்...

U.P.Tharsan சொன்னது…

அன்பைத்தேடி ஒரு கவிதையா!

கவிதைக்கும் கண்ணீர் வரும் கவிஞியின் கண்கள் கலங்கினால்...

காத்திருங்கள் காலம் கண்ணில்காட்டும் அன்பை... :-))

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

புதியவனின் கருத்துக்கு நன்றி. தேடல் தொடர்கிறது... தேடிய பொருள்தான் கிடைக்கவில்லை...

U.P.Tharsan கூறியது...
//அன்பைத்தேடி ஒரு கவிதையா!

கவிதைக்கும் கண்ணீர் வரும் கவிஞியின் கண்கள் கலங்கினால்...

காத்திருங்கள் காலம் கண்ணில்காட்டும் அன்பை... :-))//

கருத்துக்கு நன்றி தார்ஷன். 'காத்திருக்கிறேன்'... இதுதான் எனது அடுத்த கவிதையின் தலைப்பு.

ச. ராமானுசம் சொன்னது…

அன்பு அப்படின்னா ????

இன்னிக்கி செத்தா, நாளைக்கு milk.

day after tomorrow, curd.

இதுதான் உலகம்.

து. பவனேஸ்வரி சொன்னது…

ச. ராமானுசம் அவர்களுக்கு வணக்கம். அன்பு என்றால் என்ன என்றா கேட்கிறீர்கள்? அதைத் தானே நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்...