வழக்கம் போல கவிதா தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள். அப்போது அவ்விடம் முதல் நாளன்று சமாதானம் பேச வந்தவன் வந்தான். சிறிது தூரம் தள்ளி அமர்ந்து கவிதாவையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனைக் கவிதாவும் கவனிக்கத் தவறவில்லை. இருப்பினும் அந்த வாலிபன் கவிதாவைப் பார்த்துச் சிரிக்கவோ பேசவோ முயலவில்லை.
கவிதாவும் அவ்வப்போது அவனைக் கடைக்கண்ணால் கவனிக்கவே செய்தாள். அவன் தன்னைப் பார்த்துச் சிரிப்பான் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தாள். எதிர்ப்பார்த்த அவள் தனது உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் மறைத்தாள்.
இறுதிநாள் போட்டியும் முடிந்தது. அனைவரும் வேண்டியவர்களிடம் விடைப்பெற்றுக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினர். கவிதாவும் அவ்வாலிபனும் கண்ணாலேயே விடைப்பெற்றுக் கொண்டனர். திடலை விட்டு வெளியே செல்லும் போது அவ்வாலிபன் கவிதாவை நோக்கிக் கையாட்டி புன்முறுவல் செய்தான்.
கவிதாவிற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. நிஜமாகவே அவன்தான் கையசைத்துப் புன்னகைத்தானா? இல்லை அது தனது மனப்பிராந்தியா என்று சந்தேகித்தாள். இருந்தும் என்ன செய்வது? அவன் பெயர் கூட அவளுக்குத் தெரியாதே? ஒரு வார்த்தைக் கூட அவனிடம் பேசமுடியவில்லையே?
பெயர் தெரியாத அவ்வாலிபன் கவிதாவின் எண்ணங்களில் அடிக்கடி சஞ்சரித்தான். அவனை மீண்டும் ஒருமுறைப் பார்ப்போமா என்று அவள் பெரிதும் ஏங்கினாள். வாரங்கள் உருண்டோடின. கவிதா வழக்கம் போல் தனது அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கினாள்.
ஏனோ இப்போதெல்லாம் அவள் அடிக்கடி கணினி மையம் செல்வது கிடையாது. எப்போதாவது ஒருநாள் தனது மின்னஞ்சல்களைப் பார்க்கச் செல்வாள். அப்போதெல்லாம் அவளது சாட்டிங் நண்பன் நவனீதனிடமிருந்து அவளுக்குக் மின்கடிதம் வந்திருக்கும். அவளும் பதில் எழுதுவாள். ஆனால் முன்பிருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை.
சித்திரைப் புத்தாண்டு வந்தது. கவிதா காலையிலேயே தனது சொந்த பந்தங்களுடன் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அவளுடைய தோழி தேவியும் குடும்பத்தாருடன் அவ்விடம் வந்திருந்தாள். காலைப் பூசைக்குப் பிறகு கவிதாவும் தேவியும் கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே தேவியின் உறவினர் பெண்ணொருத்தி அவ்விடம் வந்தாள். அவள் பெயர் சாமினி. அவள் அவர்களிருவரிடத்தும் தனக்குத் தெரிந்த நண்பர் இருவரை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றாள். அவள் கூப்பிட்ட உடனேயே தேவி பாய்ந்தெழுந்து அவளைத் தொடர ஆரம்பித்துவிட்டாள். வேறு வழியில்லாமல் கவிதாவும் அவர்கள் இருவரையும் தொடர்ந்துச் சென்றாள்.
தனது வாழ்நாளில் அன்றுதான் முதன்முதலாகக் கவிதா பாவாடைத் தாவணி அணிந்திருந்தாள். அதனால் அவளையும் அறியாமல் ஆண்களைக் கடக்கும் போது அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. தரையை நோக்கியவாறு தனது தோழியைத் தொடந்துச் சென்ற கவிதா அவர்களிருவரும் ஓரிடத்தில் நின்ற பிறகே தலை தூக்கிப் பார்த்தாள்.
கவிதாவின் முன்பு இரு ஆடவர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் சாமினியிடம் பேசிக்கொண்டிருக்க மற்றொருவன் கவிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். தலை நிமிந்து அவர்களைப் பார்த்த கவிதா அதிர்ச்சியடைந்தாள். ஆனந்தம், குழப்பம், ஆச்சர்யம் அனைத்தும் அவளை ஒருசேர ஆக்கிரமித்து அவளை நிலைக்கொள்ளாது செய்தன.
“தேவி, கவிதா, இதுதான் வாசு. இது ஐங்கரன். வாசு, இதுதான் என்னோட சொந்தக்காரத் தங்கச்சி தேவி. இது தேவியோட கூட்டாளி கவிதா,” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்கள் “ஹாய், ஹலோ!” சொல்லிக் கைக்குலுக்கிக் கொண்டனர். ஐங்கரன் கவிதாவுடன் கைக்குலுக்க கையை நீட்டினான்.
“வணக்கம்,” என்றவாறு கவிதா தனது இருகரங்களையும் குவித்தாள். முகத்தில் அசடு வழிய நீட்டிய கையினை இழுத்துக்கொண்டான் ஐங்கரன்.
“என்னலா? மானம் போச்சா?” என்று சபையில் மானத்தை வாங்கினாள் சாமினி.
“அதெல்லாம் ஒன்னுமில்லை. ரொம்பெ பண்பாடா இருக்காங்க. எனக்கு ரொம்பெ பிடிச்சிருக்கு,” என்று சமாளித்தான் ஐங்கரன். அனைவரும் சிரித்துப் பேச ஆரம்பித்தனர். கவிதா மட்டும் மெளனமானாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு தேவியின் காதுக்கருகில் வந்து, “தேவி, என் சித்தப்பா இங்கதான் இருக்காரு. என்னோட வீட்டைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? நான் இவங்கக்கூட பேசிக்கிட்டு இருக்கிறத பார்த்தா அவ்ளோதான். நான் கிளம்பறேன். அப்புறமா பார்ப்போம்,” என்று கிசுகிசுத்துச் சென்றாள்.
ஏதும் சொல்லாமல் கவிதா திடுதிப்பென கிளம்பிச் செல்வதையே ஐங்கரன் பார்த்துக் கொண்டிருந்தான். “ஏன் கிளம்பிட்டாங்க?” என்று வாசு சாமினியைக் கேட்டான். சாமினி தேவியைப் பார்த்தாள்.
“கவிதாவோட பாட்டி தேடுவாங்களாம். சொல்லிக்காமல் வந்திருச்சி. அதான் போவுது,” என்று சமாளித்தாள் தேவி.

தொடரும்…
13 கருத்துகள்:
வணக்கம். தங்களுடைய எழுத்துகளின் உயிரோட்டத்தை உணர முடிகின்றது.
நன்று. வாழ்த்துகள்.
என் வலையையும் ஒரு உலா வாருங்களேன்.
http://www.tamilmarutham.blogspot.com
நன்றி!
கவிதாவும் அவ்வப்போது அவனைக் கடைக்கண்ணால் கவனிக்கவே செய்தாள். அவன் தன்னைப் பார்த்துச் சிரிப்பான் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தாள். எதிர்ப்பார்த்த அவள் தனது உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் மறைத்தாள்.\\
பெரிய ஆளுதான் (கவிதா)
கவிதாவும் அவ்வாலிபனும் கண்ணாலேயே விடைப்பெற்றுக் கொண்டனர்\\
ரம் பம் பம்
ஆரம்பம்
\\தனால் அவளையும் அறியாமல் ஆண்களைக் கடக்கும் போது அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது\\
அருமையான வெளிப்பாடு
வார்த்தைகளில் கொண்டுவந்ததுக்கு வாழ்த்துக்கள்
\\கவிதா மட்டும் மெளனமானாள்\\
மொளனம் - அழகு மொழி.
\\தொடரும்…\\
இந்த முறை எஃப்க்ட் குறையுதே ...
யார் அறிவாரோ?
//உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் மறைத்தாள்.//
மறைச்சி வெச்சி என்னத்த சாதிக்கப் போதோ?
//இருப்பினும் அந்த வாலிபன் கவிதாவைப் பார்த்துச் சிரிக்கவோ பேசவோ முயலவில்லை.//
அப்படி போடு அருவாள
//அவ்வாலிபன் கவிதாவை நோக்கிக் கையாட்டி புன்முறுவல் செய்தான்.//
கவுத்திட்டியே தலைவா... tak achi tak achi
//மனப்பிராந்தியா//
பிராந்திலேயே புது Brand-ஆ இது?
//படிக்கட்டுகளில் அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தனர்.//
என்ன பேசினர் படிகட்டுகளில்??? "அம்மா, தாயே"???
//நண்பர் இருவரை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றாள்//
ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்... அடுத்து ஹீரோ ரீ-என்ட்ரீ தானே???
//ஆண்களைக் கடக்கும் போது அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.//
ஒரு டவுட்டு, வெட்கம் சைவமா அசைவமா?
//“வணக்கம்,” என்றவாறு கவிதா தனது இருகரங்களையும் குவித்தாள். முகத்தில் அசடு வழிய நீட்டிய கையினை இழுத்துக்கொண்டான் ஐங்கரன்.
//
அட நம்ம ஜீன்ஸ் அய்சு...
//தொடரும்…//
தயவு செஞ்சி.... தொடருங்க
கதை சுவாரசியமாகப் போகிறது அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்...
enna oru uyirottamaana kathai..
mmm..illai kavithai..
thodarukku,thondai neer vatra kaathirukiren..
வணக்கம்,
//Theeban Gunasekaran கூறியது...
வணக்கம். தங்களுடைய எழுத்துகளின் உயிரோட்டத்தை உணர முடிகின்றது.
நன்று. வாழ்த்துகள்.
என் வலையையும் ஒரு உலா வாருங்களேன்.//
கருத்துக்கு நன்றி தீபன். கண்டிப்பாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன்.
//நட்புடன் ஜமால் கூறியது...
\\தொடரும்…\\
இந்த முறை எஃப்க்ட் குறையுதே ...//
உங்களுக்காக அடுத்த முறை கூட்டிவிடுகிறேன். சரியா ஜமால்? உங்கள் வற்றாத ஆதரவிற்கு மிக்க நன்றி.
//VIKNESHWARAN கூறியது...
யார் அறிவாரோ?//
உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள் விக்கி.
வணக்கம் அனந்தன்,
//மறைச்சி வெச்சி என்னத்த சாதிக்கப் போதோ?//
அதைக் கவிதாவிடம்தான் கேட்க வேண்டும்.
//பிராந்திலேயே புது Brand-ஆ இது?//
உங்களுக்குத் தெரியாமல் புது ப்பிரண்ட்?? நோ, நோ... வாய்ப்பே இல்லை...
//ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்... அடுத்து ஹீரோ ரீ-என்ட்ரீ தானே???//
100 மார்க்! எப்படிங்க சரியா சொன்னீங்க? (அட, நீங்க கூட யோசிக்கிறீங்க!)
//ஒரு டவுட்டு, வெட்கம் சைவமா அசைவமா?//
மன்னிக்கவும் அனந்தன். உங்கள் சந்தேகத்திற்கு எனக்கு விடை தெரியவில்லை.
//தயவு செஞ்சி.... தொடருங்க//
கண்டிப்பாகத் தொடரும்... கருத்துகளுக்கு நன்றி.
வணக்கம் புதியவன்,
உங்கள் கருத்துக்கு நன்றி. நீண்ட நாட்கள் காத்திருக்க விடமாட்டேன். விரைவில் தொடரும்....
வாங்க ராஜ்மகன்,
இந்தக் கதைக்கு இப்படியொரு வாசகரா? அடுத்த பாகம் வருவதற்குள் கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொள்ளுங்கள். உங்கள் தொண்டையை இந்தத் தொடருக்காக வற்ற விட வேண்டாம். கருத்துக்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக