திங்கள், 12 ஜனவரி, 2009

இன்றைய உலகம்…


காதலித்துப்பார்
கவிதை வரும் என்றார்கள்
நானும் காதலித்தேன்
வந்தது கவிதை மட்டுமல்ல
கண்ணீரும் சேர்ந்துதான்!

பிறரை நேசித்துப்பார்
உன்னையும் நேசிப்பார்கள் என்றார்கள்
உயிரிலும் மேலாக நேசித்தேன்
என்னை நேசிக்க மட்டுமல்ல
வெறுக்கவும் செய்தார்கள்!

அன்பு செலுத்து
இன்பம் கிடைக்கும் என்றார்கள்
அன்பே உருவானேன்
இன்பம் மட்டுமல்ல
துன்பமும் சேர்ந்தே கிடைத்தது!

பாசத்தைக் கொட்டு
பந்தம் வரும் என்றார்கள்
எல்லை மீறி பாசமாயிருந்தேன்
சொந்தமும் உடன் வந்தது
பாசத்திற்காக அல்ல பணத்திற்காக!

பிறரை மன்னித்துப் பழகு
பாவங்கள் நீங்கும் என்றார்கள்
ஏசுவாய் மாறினேன்
என்னை ஏமாற்றி மட்டுமல்ல
ஏய்த்துவிட்டும் போனார்கள்!

பிறரை மதித்து வாழு
உன்னையும் மதிப்பார்கள் என்றார்கள்
அனைவரையும் மதித்தேன்
என்னை மதிக்க மட்டுமல்ல
மிதிக்கவும் செய்தார்கள்!

13 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\காதலித்துப்பார்
கவிதை வரும் என்றார்கள்
நானும் காதலித்தேன்
வந்தது கவிதை மட்டுமல்ல
கண்ணீரும் சேர்ந்துதான்!\\

அழகான வார்த்தை கோர்வைகளில் மீண்டும் ஒரு சோக ராகம் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பிறரை நேசித்துப்பார்
உன்னையும் நேசிப்பார்கள் என்றார்கள்
உயிரிலும் மேலாக நேசித்தேன்
என்னை நேசிக்க மட்டுமல்ல
வெறுக்கவும் செய்தார்கள்!\\

நேசத்திற்கு இல்லை எல்லை

எவ்வளவு வெறுத்தாலும் விட்டுவிடாதீர்கள் தங்கள் நேசத்தை ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அன்பு செலுத்து
இன்பம் கிடைக்கும் என்றார்கள்
அன்பே உருவானேன்
இன்பம் மட்டுமல்ல
துன்பமும் சேர்ந்தே கிடைத்தது!\\

அதுவும் ஒரு வகை இன்பமே ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\என்னை ஏமாற்றி மட்டுமல்ல
ஏய்த்துவிட்டும் போனார்கள்!\\

வித்தியாசம் ஏதும் உண்டோ, கவி படிக்க அறிவேன் கவிஞர்கள் பாஷை சில நேரங்கள் விளங்குவதில்லை ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பிறரை மதித்து வாழு
உன்னையும் மதிப்பார்கள் என்றார்கள்
அனைவரையும் மதித்தேன்
என்னை மதிக்க மட்டுமல்ல
மிதிக்கவும் செய்தார்கள்!\\

ஏமாற்றமும் - வருத்தமும்

அப்துல்மாலிக் சொன்னது…

எதையுமே ஆழமாக (காதல், அன்பு, நேசிப்பு, மண்ணிப்பு...) செய்ததின் வெளிப்பாடு...

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும்....

அழகான வரிகள்....

புதியவன் சொன்னது…

ஆழமான உணர்வின் காயங்களை
வார்த்தைகளாய் வடித்திருக்கிறீர்கள்
வலிக்கத்தான் செய்கிறது
வரிகளை வாசிக்கும் போது...

A N A N T H E N சொன்னது…

//ஏசுவாய் மாறினேன்
என்னை ஏமாற்றி மட்டுமல்ல
ஏய்த்துவிட்டும் போனார்கள்!//
ஏசுவா மாறுனீங்களா? சொல்லவே இல்லே... சரி இனி சரித்திரத்துல உங்களையும் சேர்த்துக்கிறோம்

//காதலித்துப்பார்
கவிதை வரும் என்றார்கள்
நானும் காதலித்தேன்
வந்தது கவிதை மட்டுமல்ல
கண்ணீரும் சேர்ந்துதான்!//
அட அட அட பின்னிட்டீங்க...

yin n yang மாதிரி இருக்கு உங்க கவிதை... நன்று

logu.. சொன்னது…

\\காதலித்துப்பார்
கவிதை வரும் என்றார்கள்
நானும் காதலித்தேன்
வந்தது கவிதை மட்டுமல்ல
கண்ணீரும் சேர்ந்துதான்!\\

Marukkamudiyaatha unmainga..
Kathal kanneerai thanthuthaan
Kaalathai velgirathu..

\\பிறரை நேசித்துப்பார்
உன்னையும் நேசிப்பார்கள் என்றார்கள்
உயிரிலும் மேலாக நேசித்தேன்
என்னை நேசிக்க மட்டுமல்ல
வெறுக்கவும் செய்தார்கள்!\\

Rmba nallarukkunga..

Tamil Usi சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள்.....

மு.வேலன் சொன்னது…

//பாசத்தைக் கொட்டு
பந்தம் வரும் என்றார்கள்...//

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட வேண்டும்.


//...எல்லை மீறி பாசமாயிருந்தேன்
சொந்தமும் உடன் வந்தது
பாசத்திற்காக அல்ல பணத்திற்காக!//

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

தங்களுக்குப் பொங்கல்,
திருவள்ளுவராண்டு 2040
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழிய விழுமியங்களோடு
தமிழியல் வழியில் வாழ்ந்து
வெற்றிகள் பெறுவோம்.

தங்கள் வலைப்பதிவை என்னுடைய
'திருமன்றில்' திரட்டியில்
இணைத்துள்ளேன்.

http://thirumandril.blogspot.com
பார்க்கவும். நன்றி..!

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

நட்புடன் ஜமாலின் கருத்துகளுக்கு நன்றி. கவிஞர்களின் பாஷை மட்டும் அல்ல சில கவிஞர்களையும் பல நேரங்களில் புரிந்துக்கொள்ள முடிவதில்லை.

அபுஅஃப்ஸர் அவர்களின் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறுவது உண்மைதான். வாழப் பிறந்துவிட்டோம், வாழ்ந்துவிட வேண்டியதுதான்.

புதியவனின் கருத்துக்கு நன்றி. வலிக்கச் செய்திருந்தால் மன்னிக்கவும்.

என்னங்க அனந்தன், என்னை வம்பில் மாட்டிவிடாம போமாட்டீங்க போல! ஏசு மாதிரி அன்பு காட்டினேன்'னு சொல்ல வந்தேன்'பா. இதுக்காகவெல்லாம் என்னை சரித்திரத்துல சேர்க்க வேண்டாம். கருத்துக்கு நன்றி.

நண்பர் லோகுவின் கருத்துகளுக்கு நன்றி.

வாங்க தமிழ் ஊசி. உங்களுக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

வேலனின் கருத்துகளுக்கு நன்றி. நமது முன்னோர்கள் கூறியது உண்மைதான். நாம்தான் அதனைப் பல நேரங்களில் மறந்து விடுகின்றோம்.

சுப.நற்குணன் - மலேசியா அவர்களுக்கு வணக்கம் கூறி வரவேற்கிறேன். எமது வலைப்பதிவை தங்களது 'திருமன்றில்' திரட்டில் இணைத்ததிற்கு நன்றி. நிச்சயம் காண்கிறேன். நன்றி.