திங்கள், 19 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (7)



கவிதா உடற்பயிற்சியை நிறுத்தினாள். அந்தக் கூட்டத்தை நோக்கி ஒரு முறை முறைத்தாள். அத்தோடு நிற்காமல் நேரே விறுவிறுவென்று அவர்களை நோக்கி பெருநடை நடந்துச் சென்றாள். அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கவிதா ஆண்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தின் முன்பு பெண் சிங்கம் போல் கம்பீரமாக நின்றாள்.

“இப்ப யாரு நாங்க படம் காமிக்கிறோம்’னு சொன்னது?” என்று கடுமையானக் குரலில் கேட்டால். அவள் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே சிலருக்குத் தொடை நடுங்க ஆரம்பித்துவிட்டது. ‘வீணா வம்புல மாட்டிட்டோமோ?’ என்று எண்ண ஆரம்பித்தனர்.

“ஹலோ, நீங்க படம் காமிக்கிறீங்கன்னு சொன்னோமா? நாங்க வேற ஆளப்பத்தி பேசிக்கிட்டு இருக்கோம். தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க!” என்று மழுப்ப ஆரம்பித்தான் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

“ஓ, அப்படியா? சரி, அப்புறம் எதுக்கு பொம்பளைங்க ஆமை மாதிரி ஓடுவாங்க, பொம்பளைங்க கூடப் போட்டிப் போட்டா உங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்’னு சொன்னீங்க? அதப் பொதுவா தானே சொன்னீங்க?” என்று வெடித்தாள் கவிதா.

“ஆமா, சொன்னோம்! இப்ப, அதுக்கு என்ன?” என்று திமிராகக் கேட்டான் ஒருவன்.

“அப்படியா? அப்படினா வாங்க, ஓடிப் பார்ப்போம். யாரு மொதல்ல வராங்கன்னு பார்ப்போம்!”

இதனை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கத் தொடங்கினர். அப்போது தனக்கும் இங்கு நடப்பவைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் காலணி கயிற்றை சரி செய்துக் கொண்டிருந்தவன் பேசத் தொடங்கினான்.

“சாரி. தெரியாமப் பேசிட்டாங்க. மன்னிச்சிருங்க,” என்றான். அவனது குரலில் ஒருவித காந்த சக்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஒரு கணம், ஒரே கணம்தான்! கவிதா அவனைப் பார்த்தாள். அவளது கோபமெல்லாம் எங்கோ கண் காணாத இடத்துக்கு ஓடிப் போய் ஒளிந்துக்கொண்டன.

“என்ன மச்சி அதுக்கிட்ட போயி சாரி கேட்குற,” என்று துள்ளி எழுந்தான் முதலில் திமிராகப் பேசியவன். அவ்வளவுதான்! கவிதாவுக்கு வந்ததே கோவம்!

“ஏய், இங்கப் பாரு! இந்த ‘அது, இது’னு’ கூப்பிடுற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத! தைரியம் இருந்தா போட்டிக்கு வா. இல்லாட்டி மூடிட்டுக் கிளம்பு!” என்றாள் கவிதா.

“ஏய், என்ன ரொம்பெ பேசுறே? மரியாதையா பேசு தெரியுமா?”

“நீ மொதல்ல மரியாதையாப் பேச பழகிக்கோ. யாருக்கிட்ட எப்படிப் பேசணும்’னு எனக்குத் தெரியும்!”

நிலமை மோசமானது. கவிதா விடுவதாக இல்லை. முதலில் சமாதனம் பேசியவனே மீண்டும் தலையிட்டான்.

“சண்டை வேணாம். டேய் மச்சான், சாரி கேட்டுடு,” என்றான். அவனது நண்பனுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது.

“நான் எதுக்குடா சாரி கேட்கணும்? அதுக்கு வாய் சரியில்லை!” என்று துள்ளினான்.

“மறுபடியும் ‘அது இது’னு சொன்னே, மரியாதைக் கெட்டுடும்! தைரியம் இருந்தா போட்டிக்கு வா!” என்று பாய்ந்தாள் கவிதா.

மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. ஆண்கள் கூடி என்னென்னமோ விவாதித்தனர். அதற்குள் கவிதாவின் தோழிகள் அவ்விடம் வந்து அவளைச் சூழ்ந்துக்கொண்டனர். கவிதாவுடன் போட்டியிடுவதற்கு அவர்களில் சிறந்த ஓட்டக்காரனான ஒருவனைத் தேர்வு செய்தனர். மீண்டும் சமாதானம் பேசியவன் கவிதாவிடம் வந்தான்.

“உங்கக்கூட இவன் ஓடுவான்,” என்றான்.

“முடியாது! மொதல்ல ரொம்பெ பேசின உங்க ப்பிரண் தான் ஓடனும்! வாய் கிழிய பேச மட்டும் முடியுது, ஓட முடியாதா?” என்றாள் கவிதா. கோபத்தில் அவள் மூச்சுக்காற்று மிகவும் உஷ்ணமாக வெளிவந்தது. வந்தவன் மீண்டும் திரும்பிச் சென்றான். திமிராகப் பேசியவன் திரும்பி வந்தான்.

“என்ன, ஓடலாமா? திடலு கோசமா’தான் (வெறுமை) இருக்கு. நான் ரெடி,” என்றான்.

கவிதா அவனை ஏற இறங்கப் பார்த்தாள். “ஒ.கே.” என்றாள் சுருக்கமாக. இருவரும் திடலை நோக்கிச் சென்றனர்.

“கவிதா, ஆல் தி பெஸ்ட்!” என்று கூச்சலிட்டார்கள் அவளது தோழிகள்.

“விடாத மச்சான்! நீதன் ஜெயிப்பெ!” என்று கத்தினார்கள் அவனது நண்பர்கள். இருவரும் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தயாரானார்கள்…

தொடரும்…

8 கருத்துகள்:

புதியவன் சொன்னது…

தொடர் ஓட்டம் மாதிரி விறுவிறுப்பா
போகுது தொடர்கதை... தொடருங்கள்...

அப்துல்மாலிக் சொன்னது…

சரியான போட்டி, சரியான விருவிருப்பு..
தொடருங்கள்..

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

என்ன இது சின்ன புள்ள தனமா?

நட்புடன் ஜமால் சொன்னது…

\\
“விடாத மச்சான்! நீதன் ஜெயிப்பெ!” என்று கத்தினார்கள் அவனது நண்பர்கள். இருவரும் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தயாரானார்கள்...\\

பின்நாளில் இந்த ஓட்டம் எங்கு கொண்டு போகும் என அறியாத கவிதா ஓட துவங்கினாள் ...

தேவன் மாயம் சொன்னது…

தொடருங்கள்!!!
விருவிருப்பாக உள்ளது.

தேவா.

நான் சொன்னது…

வாழ்ததுகள் தொடருங்கள்

A N A N T H E N சொன்னது…

//ஏய், இங்கப் பாரு! இந்த ‘அது, இது’னு’ கூப்பிடுற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத! தைரியம் இருந்தா போட்டிக்கு வா. இல்லாட்டி மூடிட்டுக் கிளம்பு!” என்றாள் கவிதா.//
அடடே... ரொம்ப சூடான பொண்ணு போல... அனந்தா நீயும் அடக்கி வாசிடா...


//“நான் எதுக்குடா சாரி கேட்கணும்? அதுக்கு வாய் சரியில்லை!”//
அதானே... திடலுக்கு விளையாட வந்த பொண்ணு சாரியா கட்டி இருக்கும்? என்னா லாஜிக்?

//இருவரும் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தயாரானார்கள்…//

காட்சிய கண்முன்னே கொண்டு வந்துட்டீங்க... ஒருபடத்துல சத்யராஜும், பிருத்திவியும் ஓடுற சீன்... கதை களைக்கட்டுது

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்.

புதியவன்,
//தொடர் ஓட்டம் மாதிரி விறுவிறுப்பா
போகுது தொடர்கதை... தொடருங்கள்...//
கருத்துக்கு நன்றி.


அபுஅஃப்ஸர் கூறியது...
//சரியான போட்டி, சரியான விருவிருப்பு..
தொடருங்கள்..//
கருத்துக்கு நன்றி. தொடர்கிறேன், நீங்களும் உங்கள் ஆதரவைத் தொடருங்கள்.

VIKNESHWARAN கூறியது...
//என்ன இது சின்ன புள்ள தனமா?//
எதுங்க விக்னேஸ்?

நட்புடன் ஜமால் கூறியது...
\\“விடாத மச்சான்! நீதன் ஜெயிப்பெ!” என்று கத்தினார்கள் அவனது நண்பர்கள். இருவரும் 1500 மீட்டர் ஓட்டத்திற்குத் தயாரானார்கள்...\\

பின்நாளில் இந்த ஓட்டம் எங்கு கொண்டு போகும் என அறியாத கவிதா ஓட துவங்கினாள் ...//

பரவாயில்லையே...இதுக்கூட நல்லாதான் இருக்கு...

thevanmayam கூறியது...
//தொடருங்கள்!!!
விருவிருப்பாக உள்ளது.//

கருத்துக்கு நன்றிங்க தேவா.

நான் கூறியது...
//வாழ்ததுகள் தொடருங்கள்//
வாழ்த்துக்கு நன்றி.


A N A N T H E N கூறியது...
//காட்சிய கண்முன்னே கொண்டு வந்துட்டீங்க... ஒருபடத்துல சத்யராஜும், பிருத்திவியும் ஓடுற சீன்... கதை களைக்கட்டுது//
கதையில எப்பங்க சத்தியராஜூம் பிருத்திவியும் வந்தாங்க?