திங்கள், 19 ஜனவரி, 2009

ஏன் இப்படி இருக்கின்றாய்?


தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
உன்னைச் சுற்றி கொடுமைகள்
கைகொட்டி சிரிக்கின்றன-நீயோ
வாயிருந்தும் ஊமையாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
ஆவேசத்துடன் எழுந்து வா
கொடுமைகளைத் தட்டிக் கேள்-நீ
இன்னொரு ஆப்ரஹாம் லிங்கன்!

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
நீதி இங்கே செத்து மடிகின்றது
அநியாயம் தலைவிரித்தாடுகிறது-நீயோ
உண்மைத் தெரிந்தும் கோழையாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
உயிர் போனால் போகட்டும்
அநியாயத்தை ஒழித்துவிடு-நீ
என்றென்றும் நினைவில் வாழ்வாய்!

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
கொச்சை சொற்களைக் கொண்டு
பச்சை பச்சையான வார்த்தைகள்-நீயோ
காதிருந்தும் செவிடனாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
பேச்சினிலே கசப்பா தமிழுக்கே இழுக்கா?
புதியதோர் புரட்சி செய்-நீ
நாளைய பாரதி ஆவாய்!

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
சமுதாயம் இங்கே சீரழிகின்றது
நிலைமை நன்கு அறிந்திருந்தும்-நீயோ
வலுவிருந்தும் கையாலாகாதவனாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
துடித்தெழு துன்பத்தைத் தொடைத்திடு
சமுதாய சீர்த்திருத்தம் செய்திடு-நீ
பின்னாள் சரித்திரம் ஆவாய்!


தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
எங்கு நோக்கினும் அக்கிரமங்கள்
தட்டிக் கேட்க வலுவின்றி-நீயோ
உயிரிருந்தும் பிணமாக…

தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
நியாயத்தைத் தட்டிக்கேள்
அக்கிரமத்தை அழித்துவிடு-நீ
நல்ல மனிதனாய் வாழ்வாய்!

11 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
துடித்தெழு துன்பத்தைத் தொடைத்திடு
சமுதாய சீர்த்திருத்தம் செய்திடு-நீ
பின்னாள் சரித்திரம் ஆவாய்!\\

உண்மையே

\\தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
எங்கு நோக்கினும் அக்கிரமங்கள்
தட்டிக் கேட்க வலுவின்றி-நீயோ
உயிரிருந்தும் பிணமாக…\\

வெட்கக்கேடு ...

\\தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
நியாயத்தைத் தட்டிக்கேள்
அக்கிரமத்தை அழித்துவிடு-நீ
நல்ல மனிதனாய் வாழ்வாய்! \\

நல்ல வரிகள் ...

புதியவன் சொன்னது…

தன் பெருமை தனக்கே தெரியாத
தமிழனை தட்டி எழுப்பும் முயற்சி...

கவிதை அருமை
வரிகளில் துடிப்பு தெரிகிறது...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

ஜமாலின் கருத்துக்கு நன்றி.

வாங்க புதியவன். நானும் எழுப்ப முயன்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இயன்ற வரையில் முயன்றுப் பார்ப்போம்...கருத்துக்கு நன்றி.

அப்துல்மாலிக் சொன்னது…

நல்லதொரு எழுச்சியான வரிகள்
இதை கண்ட பிறகாவது விழித்தெலுமா
நமது அரசாங்கம்..
மத்திய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருக்கும் நமது அரசாங்கம் நினைத்தால் நடைபெறவிற்கும் கிரிக்கெட் போட்டிக்கு நமது அணியை செல்லவிடாமல் தடுக்கலாம், இதன்மூலம் உலகப்பார்வை இந்த பாழ்பட்ட மக்களின் மீது திரும்பும்...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் அபுஅஃப்ஸர்,
தமிழகத்து அரசியல் நிலவரங்களுக்கும் எனக்கும் அதிக தூரம். எனது வரிகள் தங்கள் நாட்டின் அரசியலோடு சம்பந்தப்பட்டிருந்தால் மகிழ்ச்சியே! தங்கள் கருத்துக்கு நன்றி.

logu.. சொன்னது…

\\தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
எங்கு நோக்கினும் அக்கிரமங்கள்
தட்டிக் கேட்க வலுவின்றி-நீயோ
உயிரிருந்தும் பிணமாக…\\

Nijam...

thangal kavithai
oru tamizhanaga
ennaium kaayam seigirathu...

Romba aazhamana va(li)rigal..
Nallarukkunga...

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

Great! GREETINGS FROM NORWAY!

நான் சொன்னது…

பெரியார், ஜீவானந்தம், காமராஜர், பாரதிதாசன், அண்ணா, போன்ற தமிழ் தலைவர்கள் வழிநடத்திய நாட்டில் இன்று எங்கே இப்படி தலைவர்கள்? பின் எப்படி தமிழன் இருப்பான் தங்களின் வாழ்கையை மட்டுமே காக்க நினைக்கிறார்கள் இன்றைய தலைவர்கள். நல்ல தலைவர்கள் ஒருங்கிணைத்தால் இது சாத்தியமே

A N A N T H E N சொன்னது…

நல்ல கவிதை.. எந்த தமிழனைத் திட்டுறீங்க?.. ஓ அவரையா? சரி சரி...

//தமிழனே
ஏன் இப்படி இருக்கின்றாய்?
நியாயத்தைத் தட்டிக்கேள்
அக்கிரமத்தை அழித்துவிடு-நீ
நல்ல மனிதனாய் வாழ்வாய்!//

அநியாயம்தானே?

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

//Nijam...

thangal kavithai
oru tamizhanaga
ennaium kaayam seigirathu...

Romba aazhamana va(li)rigal..
Nallarukkunga...//

லோகு அவர்களை எனது கவிதை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். கருத்துக்கு நன்றி.

Shan Nalliah / GANDHIYIST அவர்களை வணக்கம் கூறி வரவேற்கிறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஆதரவைத் தொடருங்கள்.

வாருங்கள் 'நான்'. அரசியல் தலைவர்களை மட்டுமே நம்பியிருந்தால் நம்மினம் முன்னேறுவது எப்போது? ஒற்றுமை என்பதே நமக்கு எட்டாக்கனியாக இருக்கிறதே!

அனந்தனுக்கு வணக்கம்.
//நல்ல கவிதை.. எந்த தமிழனைத் திட்டுறீங்க?.. ஓ அவரையா? சரி சரி...//
யாருங்க அவரு? என்னை வம்பில மாட்டி விடாம கிளம்ப மாட்டீங்க தானே?

logu.. சொன்னது…

\\லோகு அவர்களை எனது கவிதை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். கருத்துக்கு நன்றி\\

Mannippu kekkara alavuku
Nanga periya manusan illeenga...

so.. unga nanriya mattum
naan eduthukaren...

matrathu neengale petrukolavum...