திங்கள், 12 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (4)


கவிதா சட்டென எழுத்து கட்டிலில் அமர்ந்தாள். ‘ஐ! தேவி வந்துட்டாளா? அவகிட்ட இப்ப எதுவும் சொல்லக்கூடாது. சாட்டிங் ப்பிரண் பத்தி கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்!’ என்று நினைத்துக்கொண்டாள்.

“பாட்டி, கவிதா வீட்டிலேயா இருக்கு?” என்று வீட்டுப் பின்கட்டில் அமர்ந்திருந்த மூக்காயிடம் கேட்டாள் தேவி.

“ஆமாம்’மா. தூங்கிக்கிட்டு இருக்கு. போய் எழுப்பிப் பாரு,” என்று சொல்லி கமலத்திடம் பாதியில் கூறி விட்ட கதையைத் தொடர்ந்தாள் மூக்காயி.

அடி மேல் அடி வைத்து வந்த தேவி கவிதாவின் அறைக்கதவை லேசாகத் தட்டினாள்.

“கவிதா…, கவிதா…” என்று மெல்லியதாய் அழைத்தாள்.

“கதவுத் தொறந்துதான் இருக்கு. உள்ளுக்கு வா,” என்றாள் கவிதா.

“தூங்கிறயா?” என்றவாறு அறைக்குள் நுழைந்த தேவி கவிதாவின் கட்டிலோரத்தில் அமர்ந்தாள்.

“இல்ல… முழிச்சிதான் இருந்தேன்,” என்றவாறு கட்டிலை விட்டு எழுந்த கவிதா நேரே கதவருகே சென்று கதவைத் தாழிட்டாள்.

“எப்ப வீட்டுக்கு வந்த? உங்கப் பாட்டி வீட்டுக்கு வந்து நீ இன்னும் வரலை’னு அம்மாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தாங்க. உனக்கு ஸ்பெசல் கிளாஸ் இருக்குன்னு சொல்லிட்டேன். நீ என்ன சொன்னே?”

“ஹாஹா…என்னைக் கேட்டாதானே? எனக்குப் பஸ் கிடைக்கல. வீடு வந்து சேர லேட்டாயிடுச்சி. நல்ல வேளை! பாட்டி உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. அவங்க வரும் போது நான் அப்படியே தூங்கற மாதிரி நடிச்சுட்டேன். இன்னும் ஒன்னும் கேட்டுக்கல. கேட்டாலும் நான் மொதல்லேயே வந்துட்டேன்னு சொல்லிருவேன்.”

“எப்படி’லா உன்னால மட்டும் இப்படினா முடியுது?”

“அதுக்கெல்லாம் தனித் திறமை வேணும் டியர்.”

“அப்புறம், என்ன கதை?”

“என்ன கதை?”

“சாட்டிங் பண்ணப் போனியே. என்ன ஆச்சு? யாருக்கூட சாட் பண்ணுனே? ஒன்னுமே சொல்லமாட்ற? எனக்குத் தெரியாம ஏதாவதுப் பண்றியா?”

“ச்சே... அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. உனக்குத் தெரியாம ஏதாவது செய்வேனா? நவநீதன்’னு ஒரு ப்பிரண். இன்னைக்கு சாட் பண்றதா சொல்லியிருந்தேன். அதான் போயிட்டு வந்தேன். கொஞ்ச நேரம் தான் சாட் பண்ணினோம்.”

“கொஞ்ச நேரம்?” நக்கலாய் கேட்டாள் தேவி.

“உண்மையா கொஞ்ச நேரம்தான்’லா. அவங்க வந்ததே லேட்டு. எனக்கும் மணியாயிருச்சு. கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துட்டேன்.”

“வருத்தப் படற மாதிரி தெரியுது?”

“அப்படி ஒன்னுமில்ல.”

“சரி, நம்பறேன். ஒன்னுமில்லன்னு நம்பறேன். இருந்தாலும், சாட் பண்றே, கொஞ்சம் பாத்துப் பண்ணு. சாட் பண்றவனுங்க ரொம்ப ஏமாத்துவானுங்கன்னுக் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்துக்கோ…”

“ஒ.கே. தாங்ஸ் ப்போர் யுவர் அட்வைஸ். பேச நல்லப் பையான் மாதிரிதான் தெரியுது. இன்னும் கொஞ்ச நாள் சாட் பண்ணிப் பார்ப்போம்.”

“பாரு, பாரு… ஏய், ஒங்கிட்ட சொல்ல மறந்துட்டேன். நான் மேட்ஸ் டியூசன் போலாம்’னு இருக்கேன். நீயும் வர்றியா?” என்று தேவி கேட்கவும் மீண்டும் கவிதாவின் பாட்டி கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் ‘கப்சிப்’பென்று அமைதியானார்கள்.


தொடரும்…

8 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\“சரி, நம்பறேன். ஒன்னுமில்லன்னு நம்பறேன். இருந்தாலும், சாட் பண்றே, கொஞ்சம் பாத்துப் பண்ணு. சாட் பண்றவனுங்க ரொம்ப ஏமாத்துவானுங்கன்னுக் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்துக்கோ…”\\

ஆமா உண்மைதான் ...

ஜாக்கிரதை.

புதியவன் சொன்னது…

யதார்த்தமான உரையாடல்கள்
அனைத்தும் அழகு தொடருங்கள்...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி. கவிதா ஜாக்கிரதையா நடந்துக்கிறாளா இல்லையா என்றுதான் தெரியவில்லை...

புதியவனின் கருத்துக்கு நன்றி.

அப்துல்மாலிக் சொன்னது…

நட்புடன் ஜமால் சொன்னது…
\\“சரி, நம்பறேன். ஒன்னுமில்லன்னு நம்பறேன். இருந்தாலும், சாட் பண்றே, கொஞ்சம் பாத்துப் பண்ணு. சாட் பண்றவனுங்க ரொம்ப ஏமாத்துவானுங்கன்னுக் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்துக்கோ…”\\

ஆமா உண்மைதான் ...

ஜாக்கிரதை.
//

அப்படி எத்தனை தடவை ஏமாத்தி.... மண்ணிக்கவும்.. ஏமாந்து இருக்கீங்க நட்புடன் ஜமால்....????

நல்ல உரைநடையுடன் கூடிய தொடர்... வாழ்த்துக்கள்...

A N A N T H E N சொன்னது…

//நான் மேட்ஸ் டியூசன் போலாம்’னு இருக்கேன். நீயும் வர்றியா?” என்று தேவி கேட்கவும் மீண்டும் கவிதாவின் பாட்டி கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் ‘கப்சிப்’பென்று அமைதியானார்கள்.//
மேட்ஸ்க்கு டியூசன் போனா பாட்டி திட்டுவாங்களா? ஏன் அமைதி ஆனாங்கோ... எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.... இப்பவே இப்பவே


//எப்படி’லா உன்னால மட்டும் இப்படினா முடியுது//

Repeat!!!

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் அவர்களின் கருத்துக்கு நன்றி. உங்கள் கேள்விக்கு ஜமால்தான் பதில் சொல்ல வேண்டும்.

அனந்தன், பாட்டி திட்டல'பா, கதவைத்தான் தட்டினாங்க! பாட்டி ஏன் கதவைத் தட்டுறாங்க'னு கேட்கறதுக்காக இருவரும் அமைதியானார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையா? எப்படி'லா உங்களால இப்படினா கேள்வி கேட்க முடியுது?

A N A N T H E N சொன்னது…

//எப்படி'லா உங்களால இப்படினா கேள்வி கேட்க முடியுது? //

இங்க பாருங்கப்பா, கதையில வர்ற பொண்ணு மாதிரியே து.பவனேஸும் சொல்றாங்க... என்னா ஒத்துமை

து. பவனேஸ்வரி சொன்னது…

அனந்தன், இதுதானே வேண்டாங்கறது? இந்த வம்புக்கு நான் வரல. ப்பிளீஸ் விட்ருங்க...