திங்கள், 31 டிசம்பர், 2012

இப்பொழுதெல்லாம்…

இப்பொழுதெல்லாம்
பகல்கள் இரவாகின்றன
இரவுகள் பகலாகின்றன
பசியும் நித்திரையும் மறைகின்றன
ஏக்கமும் தவிப்பும் கூடுகின்றன

இப்பொழுதெல்லாம்
அழைப்பேசி கைகளில்
தலையணை அணைப்பினில்
நாள் முழுக்க இணையத்தில்
காதல் பொங்கும் இதயத்தில்.

இப்பொழுதெல்லாம்
தனியாக சிரிக்கிறேன்
தனிமையில் மகிழ்கிறேன்
கனவினிலே மிதக்கிறேன்
வாழ்க்கையை இரசிக்கிறேன்3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தயவு செய்து உங்கள் தொடர்பு இலக்கத்தை அனுப்பி வையுங்கள். முக்கியமான விடயம் ஒன்று தொடர்பில் பேசவேண்டி உள்ளது.

ilankainet@gmail.com

logu.. சொன்னது…

ரசிக்கத்தானே வாழ்க்கை..

வாழ்த்துகள்..

v.chandrasekaran சொன்னது…

அழைப்பேசி அல்ல அலைபேசி