ஞாயிறு, 20 மார்ச், 2011

ஆயிரம் மடங்கு!






என்னைவிட அவளை
ஆயிரம் மடங்குப் பிடிக்குமென்றாய்
ஏதோ, மனம் சுக்கு நூறாய் உடைந்துச்
சிதைந்ததைப் போல் ஓர் உணர்ச்சி

வலிக்கிறது
மனம் அதிகம் வலிக்கிறது
நீ என்னை வெறுக்கிறேன் என்றபோது
உண்டாகாத வலி இப்போது வருகிறது

அவ்வளவு பிடிக்குமா அவளை?
பொறாமையாய் இருக்கிறதடா
முகம் தெரியாத அவள் மீது
அதிகப் பொறாமையாய் இருக்கிறது!

நினைத்துப் பார்க்கவும் தைரியமில்லை
எந்தளவிற்குக் காதலித்திருப்பாய் அவளை
இதனைத் தெரிந்ததும் எனது எதிர்ப்பார்ப்புகள்
சுக்கு நூறாய் உடைந்துச் சிதைந்தது!

மனக்கோட்டைகள் விழுந்து சிதறியது
ஆகாயம் தலை மேல் விழுந்தது போன்று
பூமி இரண்டாகப் பிழந்தது போன்று
தலைச் சுற்றி மனம் இருண்டது!

ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இப்பொழுது நினைத்தாலும்
தலைச் சுற்றி மயக்கம் வருகிறது
இப்படியே உயிர் போகக்கூடாதா?

எதற்காகக் கேட்டேன் என்றாகிவிட்டது
உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று
ஒரே ஒரு பொய் சொல்லியிருக்கலாமே
என்னுயிர் நிம்மதியில் உறைந்திருக்கும்

பேசிய மூன்று மணி நேரத்தில்
அவளைக் காதலிக்கிறேன் என்றாயா?
அந்தளவிற்குப் பாக்கியசாலியா அவள்?
நான் மட்டும் ஏன் எப்பொழுதும் துரதிஷ்டவாதியாய்?

வலிக்கிறது அன்பே
இந்த வலிக்கு மருந்தொன்று இருந்தால்
இந்த வலியின் வடுவை மறைக்க முடிந்தால்
எவ்வளவோ நன்மையாய் இருக்கும்!

‘உன்னைவிட ஆயிரம் மடங்குப் பிடிக்கும்’
இந்த ஒற்றை வரி என்னை
ஒரேயடியாய் கொன்று புதைத்து
என் ஆசைகளுக்கு சமாதி கட்டிவிட்டது!

அதற்குப் பிறகு நீ பேசிய எதுவும்
என் காதில் விழவில்லை
நான் அழவில்லை, அழவும் மாட்டேன்
ஆனால், கண்ணீர் மட்டும் வந்தது

ஆயிரம் மடங்கு!
இரண்டு மடங்கு அதிகம் என்றிருந்தாலே
ஈராயிரம் முறை இறந்திருப்பேன்
ஆயிரம் மடங்கு என்று சொல்லிவிட்டாய்

மூன்று மணி நேரத்தில் அவளிடம் காதல்
மூக்கால் அழுதாலும் என் மீது வரவில்லை
புரிகிறதுகாதல் இயற்கையானது
அதற்குக் கூட என்மீது அனுதாபம் இல்லை!

இனி நீ பிடிக்கும் என்றாலும்
என் மனம் ஆறப்போவதில்லை
உன் மனதில் வேறொருத்தி இருக்கும் போது
நான் ஆசைக்கொள்வது முறையல்ல

இன்னமும் வலிக்கிறதடா
இதயம் வீங்கி வலிக்கிறது
இடி தாங்கும் இதயம் இந்த
வலி தாங்க மறுக்கிறது!

ஆயிரம் மடங்குப் பிடிக்குமா அவளை?
உண்மையாகவா? என்னை விடவா?
ஐயோதாங்க முடியவில்லையே
என்னால் ஏற்க இயலவில்லையே

ஆயிரம் மடங்கு என்பது எவ்வளவு அதிகம்?
என்னைவிட ஆயிரம் மடங்கு என்றாயே
அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே
எதார்த்தத்தை எதிர்க்கொள்ள முடியாமல் நான்

பரவாயில்லை
இந்த வலி எனக்குப் பழகிவிடும்
நீ மகிழ்ச்சியாய் இருந்தால்
அதுவே எனக்குப் போதும்!

இனி உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன்
உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன்
உன்னைவிட்டு விலகியிருப்பது
கடினம்தான்.

ஆனால், அதுதான் நல்லது
உன் மீது நான் கொண்ட காதலுக்கும்
அவள் மீது நீ கொண்ட காதலுக்கும்
உன்னை நான் விலகியிருப்பது நல்லது!

ஆயிரம் மடங்கு என்றாயே
அதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது
குழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்
காதலின் வலி நானும் அறிவேன்!

‘உன்னைவிட ஆயிரம் மடங்குப் பிடிக்கும்’
இந்த வரி என்னுள் ஆழமாய் பதிந்துவிட்டது
இன்னமும் வலிக்கிறது அன்பே
வலித்துக்கொண்டே இருக்கிறது!

ஒருகால் நான் இறந்துவிட்டால்
என் சமாதியில் எழுதச்சொல்லுங்கள்
‘இவளைவிட அதிகமாக உன்னை
எவராலும் காதலிக்க முடியாது’ என்று!

ஆயிரம் மடங்கு அல்ல
பத்தாயிரம் மடங்கு அதிகமான காதல்
உன் மீது எனக்கு உண்டு
அதனால் விலகிச் செல்கிறேன்!

அவள் மீண்டும் உன்னைச் சேரவேண்டும்
நான் பொறாமைப் படுவேன், இருந்தும்
நீ மகிழ்ச்சியாய் இருப்பதைப் பார்த்து
அமைதிக் கொள்வேன்!

நீ அவளைச் சேரவேண்டும்
உன் காதல் தொடர வேண்டும்
திருமணத்தில் முடிந்து இன்பம் பெற வேண்டும்
அதனை நான் காண வேண்டும்!

என் வலியை மறைத்துக்கொண்டு
இயதத்தைக் கல்லாகிக்கொண்டு
பொய்யாகச் சிரித்துக்கொண்டு வாழ்த்துகிறேன்
எங்கிருந்தாலும் வாழ்க!

உன்னைப் போல் ஒருவனை
காதலித்தேன் என்ற பெருமை போதும்
வாழ்நாள் முழுக்க வாழ்ந்து விடுவேன்
எனது காதலுடன்!

10 கருத்துகள்:

eye brows சொன்னது…

தமிழில் சடுகுடு ஆடதெரிந்த வீராங்கனை நீங்கள் ...கவிதை அருமை .............

து. பவனேஸ்வரி சொன்னது…

என்ன சொல்ல வருகின்றீர்? புரியவில்லை நண்பரே...

eye brows சொன்னது…

உங்கள் அளவுக்கு இல்லாவிடினும் என் அளவுக்கு நானும் கொஞ்சம் கிறுக்குவேன் ... என் ப்ளாக் பக்கம் வந்து பார்த்து உங்கள் கருத்து தெரிவித்தால் மோதிர கையால் குட்டு பெற்றவனாவேன் ...பார்க்க ....thalamragam.blogspot.com

eye brows சொன்னது…

வார்த்தைகளால் விளயடுகிறேர்கள் அல்லவா? அதை சொன்னேன்

eye brows சொன்னது…

புரிந்ததா தோழி??????

logu.. சொன்னது…

நல்லாருக்குங்க..

அருமை.

து. பவனேஸ்வரி சொன்னது…

eye brows: புரிந்தது நண்பரே...

லோகு: நன்றி தோழரே...

chandrasekaran சொன்னது…

piranthu irakkum kala idaiveliyil yethanai eerpukal uerukku vandhu poi inba thunpam kotukkum

vizhii சொன்னது…

கவிதை எழுதுவது எளிது
கவிதையாய் எழுதுவது கடினம்
அற்புதமாய் கவிதை படைப்பு
உங்கள் அத்தனை வரிகளும் அருமை .....

து. பவனேஸ்வரி சொன்னது…

chandrasekaran: உண்மைதான்...

vizhigal: நன்றி நண்பரே...