செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

உன்னை அல்ல!


நேசிக்கிறேன்
மிகவும் நேசிக்கிறேன்
உன்னை அல்ல!
நீ பேசும் தமிழை
உனது திறமையை
கவர்ந்திழுக்கும் திறனை
அளவான அபிநயத்தை
அழுத்தமான சொற்களை
தெளிவான சிந்தனைகளை!

விரும்புகிறேன்
நட்பை விரும்புகிறேன்
உன்னோடு அல்ல!
அருமை தமிழ்மகனோடு
தெளிந்த சிந்தனைவாதியோடு
சிறந்த பேச்சாளனோடு
திறமையான தமிழனோடு
கவிதை நெஞ்சத்தோடு
தமிழ்ப் பற்றாளனோடு!

மின்னஞ்சல் காத்திருக்கும்
உனக்காக பார்த்திருக்கும்
கவிநெஞ்சம் துடிதுடிக்கும்
ஆவலோடு எதிர்பார்க்கும்!

6 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//நேசிக்கிறேன்
மிகவும் நேசிக்கிறேன்
உன்னை அல்ல!
நீ பேசும் தமிழை//

அழகான வரிகள்..

Ahamed irshad சொன்னது…

Nice lines good...

நட்புடன் ஜமால் சொன்னது…

நீண்ட காலங்களுக்கு பிறகு +ve கவிதை

நல் வரிகளுடன் :)

logu.. சொன்னது…

\\நேசிக்கிறேன்
மிகவும் நேசிக்கிறேன்
உன்னை அல்ல!
நீ பேசும் தமிழை
உனது திறமையை
கவர்ந்திழுக்கும் திறனை
அளவான அபிநயத்தை
அழுத்தமான சொற்களை
தெளிவான சிந்தனைகளை!\\

Nice lines.
Romba nalaikapram nalla varigal..

A N A N T H E N சொன்னது…

இண்டர்நெட் காதலா? சொல்லவே இல்ல

VELU.G சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்குங்க


அதிக நாள் இழுக்காம
நேசிக்கிறேன்
மிகவும் நேசிக்கிறேன்
உன்னை
அப்படின்னு சொல்லிடுங்க