சனி, 10 ஜூலை, 2010

பிரிவு!


கடந்த கால நினைவுகளை
சற்று எண்ணிப் பார்க்கின்றேன்
எத்தனை குறும்புகள், எத்தனைச் சேட்டைகள்
அத்தனையும் பள்ளி வாழ்க்கை முடியும் போது
சூரியனைக் கண்ட பனி போல ஆகிவிட்டன!

கடந்த வந்த பாதை என்னவோ
கற்களும் முற்களும் நிறைந்ததுதான்
ஏனோ அதிலும் ஒரு சுகம், ஒரு மகிழ்ச்சி
இளமைப் பருவத்திலே துள்ளித் திரிந்த காலம்
வாழ்வின் இனிமையானப் பருவம்!

எங்கேயோ பிறந்தோம் எங்கேயோ வளர்ந்தோம்
பள்ளி என்ற கூடத்திலே இணைந்தோம்
நட்பு என்னும் பந்தத்தை வளர்த்தோம்
மகிழ்ச்சி எனும் கடலில் நீந்தி மகிழ்ந்தோம்
இன்று பிரிவு எனும் மரணத்தை நெருங்கிவிட்டோம்!

சிரித்தோம், பேசினோன், பழகினோம்
அனைத்தையும் அசைப் போடுகையில்
இனம் புரியாத சுகமும் சுமையும்
மனதை வெகுவாக அழுத்துகின்றன
கண்கள் குளமாக மாறுகின்றன!

வாழ்வில் துன்பங்களைச் சந்தித்த போதெல்லாம்
தோள் கொடுத்து உதவிய நண்பர்கள்
மனம் கலங்கிய போதெல்லாம்
ஆறுதல் சொன்னத் தோழர்கள்
இப்போது பிரியத்தான் வேண்டுமா?

ஒன்றாக விளையாடினோம் ஒன்றாக சுற்றினோம்
இப்பொழுது ஒவ்வொருவரும் தனியாகச் செல்கிறோம்
சில மணித்துளிகளே சேர்ந்திருந்தாலும்
பல வருடங்கள் சேர்ந்திருந்தாலும்
நட்பின் ஆழம் மனதை பாதிக்கவே செய்கிறது!

நட்புக்கு இலக்கணம் எழுதத் தேவையில்லை
நட்பினிலே நம்பிக்கை இருந்தால் போதுமானது
சில நேரம் சண்டை மறு நேரம் கூத்து
இப்படியே கழித்துவிட்ட பள்ளி நாட்கள்
என்றென்றும் பசுமையாய் நெஞ்சினிலே!

நட்புக்குரியவர்களை நினைத்துப் பார்க்கையில்
மனதை ஏக்கம் வெகுவாகத் தாக்குகின்றது
இளமைப் பருவத்தின் கேலி, கிண்டல்கள்
இனி மீண்டும் வாழ்வினிலே திரும்புமா?
துக்கம் தொண்டையை அடைக்கின்றது!

அக்கா-தம்பி, அண்ணன்-தங்கை
உறவில்லா உறவுகள் பள்ளியிலே
சினிமா வசனங்கள் தூள் பறக்கும்
சோதனை முடிவுகளோ கோல் அடிக்கும்
என்றென்றும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

அனைத்துமே முடிந்துவிட்டது
சந்திப்பு தடைப்பட்டுவிட்டது
சந்தோஷம் மறைந்துவிட்டது
வேலை, வீடு, ஊண், உறக்கம்
மாறாத அட்டவணையில் நீயும் நானும்!

5 கருத்துகள்:

soundr சொன்னது…

இதுவும் கடந்து போகும்...


http://vaarththai.wordpress.com

VELU.G சொன்னது…

பழைய நினைவுகள் பகிர்வு அருமை

Sathis Kumar சொன்னது…

காலம்தான் அதற்கு மருந்து..

Tamilvanan சொன்னது…

இன்னும் ப‌ள்ளி சீருடையிலேயே இருக்க‌ முடியுமா?

க‌ட‌ப்ப‌துதான் கால‌ம்
நிக‌ழ் கால‌த்தில் வாழ்வோம்
ஆட்ட‌த்தை மாற்றி
ம‌ன‌மெனும் பூந்தோட்ட‌த்தில்
புதிய‌ பூக்க‌ளுக்கு இட‌ம் கொடுப்போம்.

logu.. சொன்னது…

mmm.. palli..kallori natkalil karpathu eathuvo..
peruvathu pala idhayangall..

kandippa kadaicheee varaikum varunga.