ஞாயிறு, 17 ஜனவரி, 2010

பொங்கல்


பொங்கும் பொங்கலே
எதற்கு வந்தாய்?
ஆழ் மனதில் உறங்கும்
ஆழமான இரணங்கள்
உறக்கம் கலைத்து விழித்தெழுந்து
நெஞ்சைப் பிழிந்து வலிக்க வைத்து
ஆறாத காயத்தை உண்டாக்கி
சோகத்தைப் பெருக வைத்து
என் விழி இரண்டிலும்
கண்ணீரைப் பொங்க வைக்கவா?


பொங்கலோ பொங்கலாம்…
பொங்கட்டும் பொங்கட்டும்
கண்ணீர் பொங்கட்டும்
வழியட்டும் வழியட்டும்
பாலைப் போல் என்னுயிர் வழியட்டும்!
நயவஞ்சகர்கள் மகிழ்கின்றார்கள்
கைத்தட்டி ஆர்ப்பரிக்கின்றார்கள்
பொங்கி வழிவதைக் கண்டு
பொங்கலை அல்ல…
என் கண்ணீரை!

7 கருத்துகள்:

மனோவியம் சொன்னது…

பொங்கலைக் கூடவா கண்ணிரீல் நனைப்பது? வருத்தம் தேய்ந்த முகம் உங்களுடையது. காலையில் முகத்தை நனைப்பது தண்னிரீலா..இல்லை கண்ணீரிலா?
வெறுமைதான் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.ஏன் இந்த சோகம்? இது சாபமா இல்லை கோபமா?

அகல்விளக்கு சொன்னது…

வலியேற்படுத்துகிறது.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//பொங்கி வழிவதைக் கண்டு
பொங்கலை அல்ல…
என் கண்ணீரை!//

மனது ஏனோ அமைதி காக்கிறது...

Tamilvanan சொன்னது…

பொங்க‌ட்டும் க‌ண்க‌ளில் நீர்....
க‌ண்க‌ளுக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து
மாத‌ம் ஒரு முறையாவ‌து
க‌ண்க‌ளில் நீர் க‌சிந்தால்
க‌ண்ணிலே குளிர்ச்சி ஏற்ப‌ட்டு ந‌ன்மை உண்டாகுமாம்.
அட‌டா பொங்க‌ல் வ‌ருட‌த்திற்கு ஒரு முறை அல்லவா வ‌ருகிற‌து.

logu.. சொன்னது…

Hai Pavans..

Pongaluma ungalukku kasakkuthu?

Comments poda varthaigal illai ennidam.

துபாய் ராஜா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
துபாய் ராஜா சொன்னது…

// து. பவனேஸ்வரி கூறியது...
:) //

??????!!!!!!!

:(