ஒருத்தனுக்கு ஒருத்தியென்று
வாழ்ந்து வந்தார்கள் அன்று
‘நீ இல்லையெனில் இன்னொன்று’
மாறிப்போனார்கள் இன்று!
ஏன் இந்த மாற்றமோ
ஏவாளின் சாபமோ
மனிதனின் அறியாமையோ
மானத்தின் மரணமோ?
மனதைப் பார்த்து வருவது
அன்றையக் காதல்
உடல் அழகைப் பார்த்து வருவது
இன்றையக் காதல்!
கண்டவுடன் காதலாம்
காணாமலே காதலாம்
கண்ணும் கண்ணும் மோதலாம்
சிரித்தவுடன் காதலாம்!
என்ன கண்றாவியோ
யாருக்கும் தெரியவில்லை
காதலின் நோக்கமோ
இன்னும் புரியவில்லை!
படித்தவன் வேண்டுமாம்
பணக்காரன் வேண்டுமாம்
அழகன் வேண்டுமாம்
அறிவாளி வேண்டுமாம்!
பட்டியலை வைத்துக்கொண்டு
காதலனைத் தேடிடுவாள்
அவனைவிடச் சிறந்தவன்
வந்துவிட்டால் தாவிடுவாள்!
ஒருவனை வைத்துக்கொண்டு
இன்னொன்றும் தேடிடுவாள்
கால நேரம் பார்க்காமல்
கண்டபடி கூத்தடிப்பாள்!
வளர்ப்புக் கோளாரா
வளர்ச்சியின் கிளர்ச்சியா
வயதுக் கோளாரா
வக்ரபுத்தி கொண்டவளா?
‘நீயில்லையெனில் நானில்லை’
வசனங்களும் பேசிடுவாள்
உன்னைவிட மேல் ஒருவன்
வந்துவிட்டால் பறந்திடுவாள்!
மயக்கும் புன்னகைப்பாள்
மறைந்துப் பார்த்திடுவாள்
வேண்டுமென்றே உணர்ச்சிகளை
தூண்டிவிட்டுத் தள்ளி நிற்பாள்!
செய்வதெல்லாம் செய்திடுவாள்
அறியாததுபோல் நடித்திடுவாள்
‘சாயம்’ வெளுப்பட்டால்
‘டாட்டா’ சொல்லி மறைந்திடுவாள்!
என்னக் காதலடா
காதலுக்கே துரோகமடா
துரோகம் இழைப்பதுவே
அழியாதப் பாவமடா!
வாழ்ந்து வந்தார்கள் அன்று
‘நீ இல்லையெனில் இன்னொன்று’
மாறிப்போனார்கள் இன்று!
ஏன் இந்த மாற்றமோ
ஏவாளின் சாபமோ
மனிதனின் அறியாமையோ
மானத்தின் மரணமோ?
மனதைப் பார்த்து வருவது
அன்றையக் காதல்
உடல் அழகைப் பார்த்து வருவது
இன்றையக் காதல்!
கண்டவுடன் காதலாம்
காணாமலே காதலாம்
கண்ணும் கண்ணும் மோதலாம்
சிரித்தவுடன் காதலாம்!
என்ன கண்றாவியோ
யாருக்கும் தெரியவில்லை
காதலின் நோக்கமோ
இன்னும் புரியவில்லை!
படித்தவன் வேண்டுமாம்
பணக்காரன் வேண்டுமாம்
அழகன் வேண்டுமாம்
அறிவாளி வேண்டுமாம்!
பட்டியலை வைத்துக்கொண்டு
காதலனைத் தேடிடுவாள்
அவனைவிடச் சிறந்தவன்
வந்துவிட்டால் தாவிடுவாள்!
ஒருவனை வைத்துக்கொண்டு
இன்னொன்றும் தேடிடுவாள்
கால நேரம் பார்க்காமல்
கண்டபடி கூத்தடிப்பாள்!
வளர்ப்புக் கோளாரா
வளர்ச்சியின் கிளர்ச்சியா
வயதுக் கோளாரா
வக்ரபுத்தி கொண்டவளா?
‘நீயில்லையெனில் நானில்லை’
வசனங்களும் பேசிடுவாள்
உன்னைவிட மேல் ஒருவன்
வந்துவிட்டால் பறந்திடுவாள்!
மயக்கும் புன்னகைப்பாள்
மறைந்துப் பார்த்திடுவாள்
வேண்டுமென்றே உணர்ச்சிகளை
தூண்டிவிட்டுத் தள்ளி நிற்பாள்!
செய்வதெல்லாம் செய்திடுவாள்
அறியாததுபோல் நடித்திடுவாள்
‘சாயம்’ வெளுப்பட்டால்
‘டாட்டா’ சொல்லி மறைந்திடுவாள்!
என்னக் காதலடா
காதலுக்கே துரோகமடா
துரோகம் இழைப்பதுவே
அழியாதப் பாவமடா!
5 கருத்துகள்:
// என்னக் காதலடா
காதலுக்கே துரோகமடா
துரோகம் இழைப்பதுவே
அழியாதப் பாவமடா!//
காதலில் துரோகம் என்பது மிகக் கொடுமை. நம்பிக்கை துரோகம் இருப்பதிலேயே மிக மோசமானது...
அழகான வரிகளில் அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.
ஏன் இந்தக் கோபம்... வார்த்தைகள் வெடித்திருக்கின்றன. சொந்த அனுபவமா...
ஃபெண்டாஸ்டிக் ரைட்டிங்
எங்கள் ஆண் வர்க்கங்கள் பாவம் புரிந்தவர்களாகிப்போனோம் ஆதலால்
எளிதில் ஏமாற்றி சென்று விடுகின்றனர்
என்ன செய்ய பெண்ணென்றால் பேயும் இறங்கிவிடுமென்பதாய் போய் விடும்போது ஆண்கள் மட்டுமென்ன விதிவிலக்கா நாங்களும் அவர்கள் காட்டும் போலியான பரிவில் அன்பில்
ஏமாந்துதான் போகின்றோம்.
ஒரு சில நல் உள்ளம் படைத்த பெண்டிரும் இருக்கின்றனர் ஆதலால் தான் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்னும்...
//ஒருவனை வைத்துக்கொண்டு
இன்னொன்றும் தேடிடுவாள்
கால நேரம் பார்க்காமல்
கண்டபடி கூத்தடிப்பாள்!//
பெண்கள் இந்த அளவிற்கா முன்னேறிவிட்டார்கள்!!!!!
பாவம் ஆண்கள்...
உங்கள் கவிதை ஆண்களின் கண்ணீரை துடைக்கட்டும்
இராகவன்: நன்றி நண்பரே...
விக்னேஷ்வரி: சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் கோபத்தை வெடிக்கச் செய்கின்றன... நான் என்ன செய்வது?
வசந்த்: ஆண்கள் செய்யும் துரோகத்தைச் சொல்வதற்கு வார்த்தை இல்லை...அதனால் இன்னும் அவர்களைப் பற்றி எழுதவில்லை...
தமிழ்வாணன்: கண்ணீர் வடிக்கும் ஆண்களை நான் நம்புவதில்லை தோழரே...
கருத்துரையிடுக