செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

தமிழனா?


வாழ்க்கை என்பது
வாழ்வதற்காகத்தானே?
வாழத் தெரியாதவன் முட்டாள்
வாழ அஞ்சுபவன் கோழை
வாழ்க்கையை வாழத் தெரிந்தும்
வாழாமல் இருப்பவன்…?
தமிழனா?

வஞ்சனைகள் பல செய்து
வருத்தத்தைத் தானே தேடி
வன்முறையில் ஈடுபட்டு
வலது கால், கை இழந்து
வழிகளிலே கண்ணீர் தேங்கி
நிற்பவன்...?
தமிழனா?

வீரபாண்டி கட்டபொம்மன்
வசனங்கள் பல பேசி
வீச்சறுவாள் கையில் ஏந்தி
வெட்டி குத்தி, கொலை செய்து
வீழ்பவன்…?
தமிழனா?

கம்பீரமாய் படிக்கச் சென்று
கல்லூரிக்கே தீயை வைத்து
காவல் துறையினரால் பிடிபட்டு
கண்ணீர் சிந்துபவன்…?
தமிழனா?

காலையிலே எழுந்திரிச்சு
கண்ணியமாய் தண்ணியடிச்சு
கடமைக்குச் செல்லாமல்
கண்டபடி உளறிவிட்டு
கண்மூடித்தனமாக தெருவினிலே
கல்தடுக்கி விழுபவன்…?
தமிழனா?

பொன் மீது ஆசை கொண்டு
பொருள் மீது மோகம் கொண்டு
பெண் மீது காமம் கொண்டு
பொறுக்கியாய் திரிபவன்…?
தமிழனா?

பெருமைக்குக் குண்டர் கும்பல்
புகழ் பரப்ப சுற்றிக் கும்பல்
பெற்றோரை கவனியாமல்
பொல்லாங்குப் பல பேசி
பொறுப்பின்றி திரிபவன்…?
தமிழனா?

15 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\வாழத் தெரியாதவன் முட்டாள்
வாழ அஞ்சுபவன் கோழை\\

மிகச்சரி

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கம்பீரமாய் படிக்கச் சென்று
கல்லூரிக்கே தீயை வைத்து
காவல் துறையினரால் பிடிபட்டு
கண்ணீர் சிந்துபவன்…?
தமிழனா?\\

வருந்த வேண்டிய விடயம் தான்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பெற்றோரை கவனியாமல்
பொல்லாங்குப் பல பேசி
பொறுப்பின்றி திரிபவன்…?\\


சாட்டையடி

புதியவன் சொன்னது…

தமிழர்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விசயமே...உங்களின் சொல்லாட்சி அருமை...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

ஜமால் மற்றும் புதியவனின் கருத்துகளுக்கு நன்றி.

அப்துல்மாலிக் சொன்னது…

தமிழனைப்பார்த்து கேட்கும் கேள்விகள் சரிதான்
இது விழங்குமா காதுகளுக்கு
கொதிப்பு தெரியுது உங்கள் வரிகளில்

அப்துல்மாலிக் சொன்னது…

//வாழ்க்கை என்பது
வாழ்வதற்காகத்தானே?
வாழத் தெரியாதவன் முட்டாள்
வாழ அஞ்சுபவன் கோழை//

சரியாக சொன்னீர்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே
அனுபவித்து வாழ்ந்தால் அது இனிக்கும்

அப்துல்மாலிக் சொன்னது…

//காலையிலே எழுந்திரிச்சு
கண்ணியமாய் தண்ணியடிச்சு
கடமைக்குச் செல்லாமல்
கண்டபடி உளறிவிட்டு
கண்மூடித்தனமாக தெருவினிலே
கல்தடுக்கி விழுபவன்…?//

காலைலேயா... தாங்கமுடியலே

குமரன் மாரிமுத்து சொன்னது…

பிஞ்சு வயதில் பரந்த ஞானம்.. ஆனால், அதுதானே உண்மை.

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//தமிழனைப்பார்த்து கேட்கும் கேள்விகள் சரிதான்
இது விழங்குமா காதுகளுக்கு
கொதிப்பு தெரியுது உங்கள் வரிகளில்//

எங்கே விளங்கப்போகிறது? அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

//காலைலேயா... தாங்கமுடியலே//

இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தானே செய்கின்றன. பலமுறை பார்த்த அனுபவம்...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்ரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

குமரன் மாரிமுத்து கூறியது...
//பிஞ்சு வயதில் பரந்த ஞானம்.. ஆனால், அதுதானே உண்மை.//

யாருக்குப் பிஞ்சு வயது? யாருக்கு ஞானம்? புரியவில்லையே ஐயா...

நான் சொன்னது…

நியாயமான சாடல்கள் தொடரட்டும் உங்கள் சாடல்கள்
வாழ்த்துகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//நியாயமான சாடல்கள் தொடரட்டும் உங்கள் சாடல்கள்
வாழ்த்துகள்//

கருத்துக்கு நன்றி நண்பரே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவ்விடம் வருகிறீர்கள். நன்றி.

A N A N T H E N சொன்னது…

//வாழ்க்கையை வாழத் தெரிந்தும்
வாழாமல் இருப்பவன்…?
தமிழனா?//

ஏன் கோமா ஸ்தேஜ்ல இருக்கானா அவன்?



//வீரபாண்டி கட்டபொம்மன்
வசனங்கள் பல பேசி
வீச்சறுவாள் கையில் ஏந்தி
வெட்டி குத்தி, கொலை செய்து
வீழ்பவன்…?
தமிழனா?//

வசனம் பேசி சண்டை போடுவதெல்லாம் சினிமாலத்தான், உண்மையிலே கட்டபொம்மன் வசனம் பேசினாரா?



//கண்ணியமாய் தண்ணியடிச்சு//

யாரு நாங்க... அடிச்சாலும் கண்ணியமா அடிப்போமுல்ல....



நீங்க சொன்ன தமிழர்கள் இருக்கிறார்கள், வருந்தத்தக்கது. இவர்கள் இன்னமும் சிறுபான்மைதானே... நல்லவர்களும் இருக்கின்றனர், கனியின் சுவையைவிட காயின் துவர்ப்புதான் நம்மை அதிகம் பாதிக்கிறது... உங்கள் கவிதை மொழியை ரசித்தேன்.

து. பவனேஸ்வரி சொன்னது…

A N A N T H E N கூறியது...
//வாழ்க்கையை வாழத் தெரிந்தும்
வாழாமல் இருப்பவன்…?
தமிழனா?//

//ஏன் கோமா ஸ்தேஜ்ல இருக்கானா அவன்?//

அப்படி இருந்தாலும் பராவாயில்லையே... அதைவிட மோசமா இருக்கானே?


//கண்ணியமாய் தண்ணியடிச்சு//

//யாரு நாங்க... அடிச்சாலும் கண்ணியமா அடிப்போமுல்ல....//

உங்க கண்ணியத்தை நீங்கதான் மெச்சிக்கணும்!

//நீங்க சொன்ன தமிழர்கள் இருக்கிறார்கள், வருந்தத்தக்கது. இவர்கள் இன்னமும் சிறுபான்மைதானே... நல்லவர்களும் இருக்கின்றனர், (கனியின் சுவையைவிட காயின் துவர்ப்புதான் நம்மை அதிகம் பாதிக்கிறது...) உங்கள் கவிதை மொழியை ரசித்தேன்.//

அடைப்பில் உள்ள வரியை மிகவும் ரசித்தேன். நன்றாகச் சொன்னீர்கள். கருத்துகளுக்கு மிக்க நன்றி அனந்தன்.