வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

பிறந்த தினம்!



பிறந்த தினம்
கொண்டாட்டம்தான்
ஏன் பிறந்தாய் என்று யோசித்தாயா?
எதற்குப் பிறந்தாய் என்று சிந்தித்தாயா?

பிறந்த ஒவ்வொருவருக்கும்
முடிவு எனும் இறப்பு உறுதி
பிறந்தநாள் ஞாபகம் உனக்குண்டு
இறக்கும் நாள் எப்போது சொல்வாயா?

மகிழ்ச்சிக் கடலில் நீந்துகின்றாய்
துன்பக் கடலில் மூழ்குகின்றாய்
உறவுகளோடு சிரிக்கின்றாய்
தனிமையிலே அழுகின்றாய்!

அஞ்சி அஞ்சி சாகின்றாய்
பயத்தில் மூழ்கிக் கிடக்கின்றாய்
வாழ்ந்துப் பார்க்கப் பிறந்தாய்
வாழாமல் இருப்பது ஏனோ?

சிவனை நம்பிப் பிறந்தாயா?
எமனை நம்பி இறப்பாயா?
எவனை நம்பி வாழ்ந்தாலும்,
உன்னை நம்பத் தயங்காதே!

16 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\எவனை நம்பி வாழ்ந்தாலும்,
உன்னை நம்பத் தயங்காதே!\\

இது அழகு.

அப்துல்மாலிக் சொன்னது…

//எவனை நம்பி வாழ்ந்தாலும்,
உன்னை நம்பத் தயங்காதே//

நச் வரிகள்

புதியவன் சொன்னது…

//பிறந்தநாள் ஞாபகம் உனக்குண்டு
இறக்கும் நாள் எப்போது சொல்வாயா?//

இது தெரியாததால் தானே எல்லோரும் கொஞ்சம் (நிறையவே) மகிழ்ச்சியா இருக்க்கிறோம்...தெரிந்துவிட்டால் அதை மட்டுமே நினைத்துக் கொண்டல்லவா தினம் தினம் இறந்து கொண்டிருப்போம்...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

ஆதவா சொன்னது…

நமக்குள் நாமே கேள்விகள் கேட்கும்பொழுது ஞானி ஆகிறோம். என்ன கேள்விகள் கேட்கப்ப போகிறோம் என்பதைப் பொறுத்து அனைத்தும் அமையும்!



வாழ்வு, சாவு இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும், வாழ்நிலை வழிமுறையும் தெரிந்து கொள்ளும் அனைவரும் ஞானியர்!!!

இப்போது நீங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டீர்கள்!!!!!!

தொடர்ந்து எழுதுங்கள்

ஆதவா சொன்னது…

சிவனை நம்பிப் பிறந்தாயா?
எமனை நம்பி இறப்பாயா?
எவனை நம்பி வாழ்ந்தாலும்,
உன்னை நம்பத் தயங்காதே!


நல்ல வரிகள்!!! நம்மை எப்போது நாம் நம்பாமல் போகிறோமோ அப்பொழ்தே நாம் இறந்துவிடுகிறோம்!!

ஆதவா சொன்னது…

அஞ்சி அஞ்சி சாகின்றாய்
பயத்தில் மூழ்கிக் கிடக்கின்றாய்

இரண்டும் ஒன்றுதான்!! அதனால்தான் அன்றே பாரதி,

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்று அழுத்திச் சொன்னார்!!!

குமரன் மாரிமுத்து சொன்னது…

மேலும் தொடர்க.. வளர்க....

கிருஷ்ணா சொன்னது…

//சிவனை நம்பிப் பிறந்தாயா
எமனை நம்பி இறப்பாயா??//

சிவத்தை நம்பிய சீவனுக்கு பிறப்பேது..
எமனை நம்பாத சீவனுக்கு சிறப்பேது?!

//எவனை நம்பி வாழ்ந்தாலும்
உன்னை நம்பத் தயங்காதே!//

அருமை.. வாழ்த்துக்கள்!

நான் சொன்னது…

அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\எவனை நம்பி வாழ்ந்தாலும்,
உன்னை நம்பத் தயங்காதே!\\

//இது அழகு.//

உங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்.

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//எவனை நம்பி வாழ்ந்தாலும்,
உன்னை நம்பத் தயங்காதே//

//நச் வரிகள்//

:) கருத்துக்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//பிறந்தநாள் ஞாபகம் உனக்குண்டு
இறக்கும் நாள் எப்போது சொல்வாயா?//

//இது தெரியாததால் தானே எல்லோரும் கொஞ்சம் (நிறையவே) மகிழ்ச்சியா இருக்க்கிறோம்...தெரிந்துவிட்டால் அதை மட்டுமே நினைத்துக் கொண்டல்லவா தினம் தினம் இறந்து கொண்டிருப்போம்...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...//

நீங்கள் கூறுவதும் உண்மைதான். கருத்துக்கு நன்றி புதியவன்.

து. பவனேஸ்வரி சொன்னது…

ஆதவா கூறியது...
//நமக்குள் நாமே கேள்விகள் கேட்கும்பொழுது ஞானி ஆகிறோம். என்ன கேள்விகள் கேட்கப்ப போகிறோம் என்பதைப் பொறுத்து அனைத்தும் அமையும்!



வாழ்வு, சாவு இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும், வாழ்நிலை வழிமுறையும் தெரிந்து கொள்ளும் அனைவரும் ஞானியர்!!!

இப்போது நீங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டீர்கள்!!!!!!

தொடர்ந்து எழுதுங்கள்//

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

குமரன் மாரிமுத்து கூறியது...
//மேலும் தொடர்க.. வளர்க....//

நன்றி ஐயா...

து. பவனேஸ்வரி சொன்னது…

கிருஷ்ணா கூறியது...
//சிவனை நம்பிப் பிறந்தாயா
எமனை நம்பி இறப்பாயா??//

சிவத்தை நம்பிய சீவனுக்கு பிறப்பேது..
எமனை நம்பாத சீவனுக்கு சிறப்பேது?!

//எவனை நம்பி வாழ்ந்தாலும்
உன்னை நம்பத் தயங்காதே!//

அருமை.. வாழ்த்துக்கள்!


(தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. தங்களைப் போன்ற கவிஞர்களின் வாழ்த்து எனக்கு மென்மேலும் ஊக்கமளிக்கிறது.

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே.