திங்கள், 16 பிப்ரவரி, 2009

ஏன் வந்தாய்?


எங்கே சென்றாயடா
இவ்வளவு நாட்களாய்?
எங்கே ஒளிந்திருந்தாய்?
என்னைக் காண பிடிக்காமல்
தூர தேசம் ஓடிச் சென்றாயா?
பூமிக்குள் புதைந்துக்கொண்டாயா?
உன் உருவத்தை மறைத்துக்கொண்டாயா?

அறியா வயதில்
புரியாத உணர்வாய் வந்த காதலை
துளிர்த்த பசுமைப் பயிரை
புது வெள்ளம் அடித்ததைப் போல்
புத்தம் புது மலரை
சூறாவளி தாக்கியது போல்
அழகான மயில் ஒன்றை
தீயில் கருக்குவது போல்
உளம் கொதிக்க மனம் வாட
விட்டுச் சென்றாயே!

என்ன தவறு செய்தேன்
வாய் விட்டுச் சொல்வாயா?
என்ன செய்ய வேண்டும்
மனமுவந்து கேட்பாயா?

எத்தனையோ ஆண்டுகள்
உருண்டோடி விட்டன
எத்தனையோ நாடகங்கள்
அரங்கேறி விட்டன
காய்ந்துப்போன பட்டமரமாய்
வெயிலோ மழையோ
வித்தியாசம் தெரியாமல்
வாழப் பழகிவிட்டேன் – நான்
சாகத் துணிந்துவிட்டேன்!

மறந்துக்கிடந்தேனடா
மீண்டும் காணும்வரை
பேதையாய் இருந்தேனடா
மீண்டும் பேசும் வரை
சாயம் போன சிலைக்கு
புது வண்ணம் பூசுவது போல்
ஈரம் காய்ந்த இதயத்தில்
ஊதக்காற்றாய் வருகின்றாயே!

கைக்கோர்த்து நடந்ததில்லை
அருகருகே அமர்ந்ததில்லை
தூயக் காதலொன்றை
இதயத்தில் சுமந்தோமே
சுற்றுலாச் சென்ற போது
சுனாமியால் மூழ்கியது போல்
காதலில் திளைத்த போது
பிரிவினில் மூழ்கச் செய்தாயே!

பேசிய பேச்சு
சொன்ன வார்த்தைகள்
நேற்று பெய்த மழை போல்
இன்னமும் பசுமையாய்…
எப்போது சேர்ந்திருந்தோம்
எப்படிப் பிரிந்துச் சென்றோம்
காரணமே தெரியவில்லை
கண்ணீர் இன்னும் காயவில்லை!

மறந்துதான் விட்டேனடா
உன்னையும் – உன்
கண்ணிலிருந்த மச்சத்தையும்…
சென்ற ஜென்ம நிகழ்ச்சி என்று
மூட்டைக்கட்டி வைத்துவிட்டேன்!
கட்டவிழ்ந்த மூட்டையிலிருந்து
சரிந்துவிழும் தானியம் போல்
அலையலையாய் பெருகுதடா
கடந்த கால நினைவலைகள்!

நொந்துப் போன நெஞ்சத்தை
முள்ளொன்று குத்துதே – அதைப்
பிடுங்கிப் போட வலுவில்லாமல்
இதயமும் கதறுதே….

இறந்துப்போன உணர்ச்சியொன்று
பிழைத்து வந்ததோ
மறந்துப் போன காதலொன்று
நினைவு வந்ததோ…
ஏன் வந்தாய் அன்பே
என்னைக் கொன்றுப் போடவா?
உயிரோடு தீயிலிட்டு
கருக்கி எடுக்கவா?

24 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அறியா வயதில்
புரியாத உணர்வாய் வந்த காதலை\\

அழகாயிருக்கு.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\எத்தனையோ ஆண்டுகள்
உருண்டோடி விட்டன
எத்தனையோ நாடகங்கள்
அரங்கேறி விட்டன
காய்ந்துப்போன பட்டமரமாய்
வெயிலோ மழையோ
வித்தியாசம் தெரியாமல்
வாழப் பழகிவிட்டேன் – நான்
சாகத் துணிந்துவிட்டேன்!\\

ஏன் ஏன் ஏன்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\மறந்துக்கிடந்தேனடா
மீண்டும் காணும்வரை
பேதையாய் இருந்தேனடா
மீண்டும் பேசும் வரை
சாயம் போன சிலைக்கு
புது வண்ணம் பூசுவது போல்
ஈரம் காய்ந்த இதயத்தில்
ஊதக்காற்றாய் வருகின்றாயே!\\

ஏன் இந்த விரக்தி அல்லது சோகம் என்று எளிதாய் கேட்டுவிடலாம் ...

இந்த உணர்வு எனக்கும் வாறாது இருந்திருந்தால்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கைக்கோர்த்து நடந்ததில்லை
அருகருகே அமர்ந்ததில்லை
தூயக் காதலொன்றை
இதயத்தில் சுமந்தோமே
சுற்றுலாச் சென்ற போது
சுனாமியால் மூழ்கியது போல்
காதலில் திளைத்த போது
பிரிவினில் மூழ்கச் செய்தாயே!
\\

சாமா சாமா

நட்புடன் ஜமால் சொன்னது…

\\பேசிய பேச்சு
சொன்ன வார்த்தைகள்
நேற்று பெய்த மழை போல்
இன்னமும் பசுமையாய்…
எப்போது சேர்ந்திருந்தோம்
எப்படிப் பிரிந்துச் சென்றோம்
காரணமே தெரியவில்லை
கண்ணீர் இன்னும் காயவில்லை!\\

காரணம் எனக்கு தெரியும்

ஆனால் இந்த பாழும் மணதுக்கு புரியவில்லை.

(எனக்குள்(ளும்) இருக்கும் உணர்வுகளை(யும்) அழகா எழுத்தில் கொண்டு வர இயலுகிறது தங்களுக்கு, வார்த்தைகளை கோர்க்க(த்)தெரியாமல் - உங்கள் வரிகளில் என் உள்ளம் அறிகின்றேன்)

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இறந்துப்போன உணர்ச்சியொன்று
பிழைத்து வந்ததோ
மறந்துப் போன காதலொன்று
நினைவு வந்ததோ…
ஏன் வந்தாய் அன்பே
என்னைக் கொன்றுப் போடவா?
உயிரோடு தீயிலிட்டு
கருக்கி எடுக்கவா?\\

மிக அற்புதம்.

(வாழ்க்கையின் பாதிப்பை வார்த்தைகளில் கொண்டு வந்து கொன்று விட்டீர்கள்)

நட்புடன் ஜமால் சொன்னது…

நொடிக்கும் குறைவான கண்களின் உரசலில் எனக்குள்ளே பற்றி கொண்ட தீ ஆழ்ந்து அமைதியாய் இருந்தது அவள் மீண்டும் என்னை அலைபேசியில் அழைக்கும் வரை

நட்புடன் ஜமால் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நட்புடன் ஜமால் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் ஜமால்,

//(எனக்குள்(ளும்) இருக்கும் உணர்வுகளை(யும்) அழகா எழுத்தில் கொண்டு வர இயலுகிறது தங்களுக்கு, வார்த்தைகளை கோர்க்க(த்)தெரியாமல் - உங்கள் வரிகளில் என் உள்ளம் அறிகின்றேன்)//

மிக்க நன்றி. எனது ஒவ்வொரு எழுத்தையும் உணர்ந்து வாசிக்க உங்களால் முடிகிறதென்றால் ஆறாத காயமொன்று மனதினிலே இருக்க வேண்டும் என்று சந்தேகித்தேன். சந்தேகம் ஊர்ஜிதமானது. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

//நொடிக்கும் குறைவான கண்களின் உரசலில் எனக்குள்ளே பற்றி கொண்ட தீ ஆழ்ந்து அமைதியாய் இருந்தது அவள் மீண்டும் என்னை அலைபேசியில் அழைக்கும் வரை//

அட, இப்படியும் நல்லாதான் இருக்கு. நல்லா எழுதுறீங்க...வாழ்த்துக்கள்.

புதியவன் சொன்னது…

//அறியா வயதில்
புரியாத உணர்வாய் வந்த காதலை
துளிர்த்த பசுமைப் பயிரை
புது வெள்ளம் அடித்ததைப் போல்
புத்தம் புது மலரை
சூறாவளி தாக்கியது போல்
அழகான மயில் ஒன்றை
தீயில் கருக்குவது போல்
உளம் கொதிக்க மனம் வாட
விட்டுச் சென்றாயே!//

உள்ளத்தின் தவிப்பை அருமையாக வார்த்தையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...

புதியவன் சொன்னது…

//என்ன தவறு செய்தேன்
வாய் விட்டுச் சொல்வாயா?
என்ன செய்ய வேண்டும்
மனமுவந்து கேட்பாயா?//

காதலில் வெளிப்படையாக இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லை...

புதியவன் சொன்னது…

//கைக்கோர்த்து நடந்ததில்லை
அருகருகே அமர்ந்ததில்லை
தூயக் காதலொன்றை
இதயத்தில் சுமந்தோமே
சுற்றுலாச் சென்ற போது
சுனாமியால் மூழ்கியது போல்
காதலில் திளைத்த போது
பிரிவினில் மூழ்கச் செய்தாயே!//

பிரிவின் வேதனை சொன்ன விதம் அருமை...

புதியவன் சொன்னது…

//இறந்துப்போன உணர்ச்சியொன்று
பிழைத்து வந்ததோ
மறந்துப் போன காதலொன்று
நினைவு வந்ததோ…
ஏன் வந்தாய் அன்பே
என்னைக் கொன்றுப் போடவா?
உயிரோடு தீயிலிட்டு
கருக்கி எடுக்கவா?//

அத்தனையும் மனதை கனக்ககச் செய்யும் வரிகள்...கற்பனையாக இருக்கும் பட்சத்தில் சரியென்று கொள்ளலாம்...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் புதியவன்,

//உள்ளத்தின் தவிப்பை அருமையாக வார்த்தையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...//

கருத்துக்கு நன்றி.

//காதலில் வெளிப்படையாக இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லை...//

உண்மைதான். ஆனால், எவரும் வெளிப்படையாக இருக்கத் தயாராக இல்லையே. மனதில் ஒன்று வைத்து வெளியே நடிக்கும் நடிகர் கூட்டம் அல்லவா உலகில் மலிந்துக் கிடக்கிறது.


//அத்தனையும் மனதை கனக்ககச் செய்யும் வரிகள்...கற்பனையாக இருக்கும் பட்சத்தில் சரியென்று கொள்ளலாம்...//

எதனை சரியென்று கொள்ளலாம்? புரியவில்லை...

புதியவன் சொன்னது…

////அத்தனையும் மனதை கனக்ககச் செய்யும் வரிகள்...கற்பனையாக இருக்கும் பட்சத்தில் சரியென்று கொள்ளலாம்...//

எதனை சரியென்று கொள்ளலாம்? புரியவில்லை...//

கவிதைக்காக மட்டும் தான் என்றால் இந்த கனமான வரிகளை தாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன்...

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
////அத்தனையும் மனதை கனக்ககச் செய்யும் வரிகள்...கற்பனையாக இருக்கும் பட்சத்தில் சரியென்று கொள்ளலாம்...//

எதனை சரியென்று கொள்ளலாம்? புரியவில்லை...//

கவிதைக்காக மட்டும் தான் என்றால் இந்த கனமான வரிகளை தாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன்...//

நிஜமாக இருந்தால் தாங்கிக்கொள்ள முடியாதா?

புதியவன் சொன்னது…

//து. பவனேஸ்வரி சொன்னது…
புதியவன் கூறியது...
////அத்தனையும் மனதை கனக்ககச் செய்யும் வரிகள்...கற்பனையாக இருக்கும் பட்சத்தில் சரியென்று கொள்ளலாம்...//

எதனை சரியென்று கொள்ளலாம்? புரியவில்லை...//

கவிதைக்காக மட்டும் தான் என்றால் இந்த கனமான வரிகளை தாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன்...//

நிஜமாக இருந்தால் தாங்கிக்கொள்ள முடியாதா?//

அதையும் தாங்கிக் கொண்டு நம்மில் பலர் வாழத்தான் செய்கிறோம்...இருந்தாலும் அது தவணை முறையில் ஒரு மரண வேதனை தான்...

அப்துல்மாலிக் சொன்னது…

நல்ல வரிகள், அருமை

உச்சகட்ட வெளிப்பாடு உங்கள் வரிகளில்

ஆதவா சொன்னது…


ரொம்ப நீளமான கவிதைங்க!!! உணர்ச்சிகளைப் பிழிந்த்து எழுதியிருக்கிறீர்கள்... வெகு சில இடங்களில் கவிதை வழியே வலியும் தெரிகிறது.. வெறும் எழுத்துக்களால்  வலியை எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்..

ஆனா, கவிதை வரிகளை கொஞ்சம் குறைச்சுக்கோங்க...  

சுரேஷ் மனோ சொன்னது…

இது சாபம் அல்ல.. உன் மீது யாரோ கொண்ட கோபம்...

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது,
//அதையும் தாங்கிக் கொண்டு நம்மில் பலர் வாழத்தான் செய்கிறோம்...இருந்தாலும் அது தவணை முறையில் ஒரு மரண வேதனை தான்...//

உண்மைதான்.

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//நல்ல வரிகள், அருமை

உச்சகட்ட வெளிப்பாடு உங்கள் வரிகளில்//

கருத்துக்கு நன்றி நண்பரே.


ஆதவா கூறியது...

//ரொம்ப நீளமான கவிதைங்க!!! உணர்ச்சிகளைப் பிழிந்த்து எழுதியிருக்கிறீர்கள்... வெகு சில இடங்களில் கவிதை வழியே வலியும் தெரிகிறது.. வெறும் எழுத்துக்களால் வலியை எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்..

ஆனா, கவிதை வரிகளை கொஞ்சம் குறைச்சுக்கோங்க... //

உங்கள் கருத்துக்கு நன்றி ஆதவா. கவிதை வரிகள் நீளமாக இருப்பின் மன்னிக்கவும். எழுதத் தொடங்கும் போது அதற்கான வரையறை நிர்ணயிக்கும் வழக்கம் என்னிடம் இல்லை. இனிவரும் காலங்களில் வரிகளைக் குறைக்க முயற்சிக்கிறேன். (மீண்டும் நீளமாகவே இருந்தால் மன்னிக்கவும்).

து. பவனேஸ்வரி சொன்னது…

சுரேஷ் மனோ கூறியது...
//இது சாபம் அல்ல.. உன் மீது யாரோ கொண்ட கோபம்...//

யாருக்கு என் மீது என்ன கோபம் அன்பரே?