வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

யார் நீ?


யார் நீ
இருண்ட என் உலகில்
எப்படி பிரவேசித்தாய்?
வெகு காலம் பழகியதைப் போல்
நீண்ட நாள் உறவு போல்
நெருக்கமாய் அறிந்ததைப் போல்
இன்னும் சொல்லத் தெரியாத
ஏதோ ஒன்று...

உன்னருகில் இருக்கையில்
கடந்த கால நினைவுகள்
பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கின்றன
ஒரு வகை மகிழ்ச்சி, இன்பம்
விவரிக்க முடியா கவலை, துக்கம்
அனைத்தும் கலந்து என்னை
இம்சிக்கின்றன!

பேச்சினிலே வெகுளி
கண்களிலே கனிவு
உதட்டினிலே சிரிப்பு
இவையாவும் உன்னுள்ளே
நான் கண்ட சிறப்பு!

நடப்பது எதுவும் புரியவில்லை
விடிய விடிய பேசியும்
பேசி முடிக்காத ஏதோ ஒன்று
இன்னும் பேச வேண்டும் போல்
உள்ளுக்குள் உணர்வு!

என்னை எனக்கே புரியவில்லை
செய்வது சரியா தெரியவில்லை
நட்பின் நோக்கம் விளங்கவில்லை
நீ நினைப்பது என்ன? அறியவில்லை!

உன்னோடு இருப்பது
மனதிற்கு ஆறுதலாய்
நெஞ்சுக்கு நிம்மதியாய்
உயிருக்கு சுகமாய்
ஆத்ம திருப்தியாய்...

வாழ்க்கையே புதிராய்
அதில் நீ வினாக் குறியாய்
விடை தேடும் முயற்சியில் நான்!
எதற்கு இதெல்லாம் நடக்கின்றது?
நான் சுயநினைவோடு இருக்கின்றேனா
இல்லை மதியிழந்து திரிகின்றேனா?

பாலைவனத்தில் நதியாய்
இருளுக்கு மத்தியில் நிலவாய்
முட்களின் மத்தியில் மலராய்
எனது தனிமையின் மத்தியில்
ஓசையாய் நீ...
சொல்லத் தெரியவில்லை
என் கவிதைக்கு வார்த்தையில்லை!

10 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

விரக்தியற்ற கவிதை ...

அருமையா இருக்குங்க

இது போல இன்னும் நிறைய எழுதுங்க

புதியவன் சொன்னது…

//பேச்சினிலே வெகுளி
கண்களிலே கனிவு
உதட்டினிலே சிரிப்பு
இவையாவும் உன்னுள்ளே
நான் கண்ட சிறப்பு!//

கவிதை வரிகளில் நல்ல மாற்றம் தெரிகிறது...
சொல்ல முடியாத உணர்வுகளை வெளிக்காட்டியிருக்கும் விதம் அழகு...

Divyapriya சொன்னது…

நல்ல கவிதை...
//விடிய விடிய பேசியும்
பேசி முடிக்காத ஏதோ ஒன்று
இன்னும் பேச வேண்டும் போல்
உள்ளுக்குள் உணர்வு!//

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது...
உங்க எங்கே செல்லும் படிச்சிட்டு இருக்கேன்...எப்போ அடுத்த பகுதி?

குமரன் மாரிமுத்து சொன்னது…

//சொல்லத் தெரியவில்லை
என் கவிதைக்கு வார்த்தையில்லை!//

என்ன செய்வது.. 'அந்த நோய்' வந்தால் விடியற்காலையில் வார்த்தை தேடும் கவிதைகளுக்கு பஞ்சம் இருக்காதுன்னு கேள்விபட்டிருக்கேன்..

கவிதை இனிமை. தொடரட்டும்!

butterfly Surya சொன்னது…

தங்கள் வலை அருமை..

வாழ்த்துக்கள்..

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்


http://butterflysurya.blogspot.com


தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்

நன்றி

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

நட்புடன் ஜமால் கூறியது...
//விரக்தியற்ற கவிதை ...

அருமையா இருக்குங்க

இது போல இன்னும் நிறைய எழுதுங்க//

உங்களைப் போன்ற வாசகர்கள் இருந்தால் நிச்சயம் எழுதுவேன் அன்பரே. கருத்துக்கு நன்றி.


புதியவன் கூறியது...
//பேச்சினிலே வெகுளி
கண்களிலே கனிவு
உதட்டினிலே சிரிப்பு
இவையாவும் உன்னுள்ளே
நான் கண்ட சிறப்பு!//

//கவிதை வரிகளில் நல்ல மாற்றம் தெரிகிறது...
சொல்ல முடியாத உணர்வுகளை வெளிக்காட்டியிருக்கும் விதம் அழகு...//

அப்படி என்ன மாற்றம் தெரிகிறது? :)கருத்துக்கு நன்றி புதியவன்.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

Divyapriya'வை வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி. 'எங்கே செல்லும்...?' அடுத்த பகுதியை விரைவில் எதிர்ப்பாருங்கள்.

வாருங்கள் குமரன் மாரிமுத்து. என்ன செய்வது? இந்த காதல் நோய்க்கு மருந்து இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லையே? கருத்துக்கு நன்றி.

வண்ணத்துப்பூச்சியாரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயம் உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். ஆதரவைத் தொடருங்கள்.
நன்றி.

RAJMAGAN சொன்னது…

நானொரு புரியாத புதிர், விடைத்தேட முயற்சிக்காதே, அது முடியாத காரியம்-ஏனெனில், எனக்கு நானே கேள்விக்குறி!

து. பவனேஸ்வரி சொன்னது…

என்னங்க ராஜ்மகன்,
என் கவிதையை எனக்கே அனுப்பியிருக்கீங்க??

கிருஷ்ணா சொன்னது…

//இருண்ட என் உலகில்
எப்படி பிரவேசித்தாய்?//

ஆரம்பம் அசத்தல்.. அதுவே கவிதையை தொடர்ந்து படிக்க தூண்டியது. இதே தலைப்பில் நானும் கொஞ்சம் கிறுக்கியிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல..!

தொடரட்டும் உங்கள் கவிப்பணி!