திங்கள், 5 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (2)


மணி மூன்றாகிவிட்டது. கவிதா காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தாள். அவள் எழுந்திருக்க முயன்றபோது, “ஹாய் கவி! சாரி போர் தெ லேட். சொன்ன நேரத்துக்கு வர முடியல. உங்கள ரொம்பெ நேரம் காக்க வச்சுட்டேன். மன்னிச்சிருங்க,” என்ற வரிகளுடன் உரையாடல் பெட்டி எட்டிப்பார்த்தது.

கவிதாவின் மனசுக்குள் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறப்பது போல் இருந்தது. ஒரு முறைக்கு மூன்று முறை அந்த வரிகளையும் அதை அனுப்பியவர் பெயரையும் மாறி மாறிப் படித்தாள். உடனடியாக உரையாடல் பெட்டியை பெரிதாக்கினாள். அவளது விரல்கள் மின்னலை விட வேகமாக அச்சுப்பலகையில் விளையாடத் தொடங்கின. கவிதாவின் கண்களை அப்போது ஏதாவது கவிஞர் பார்த்திருந்தால் ஒரு கோடி கவிதைகள் எழுதித் தள்ளியிருப்பார். அப்படி ஒரு ஒளியும் அழகும் பெற்று விளங்கின அவளது கரிய விழிகள்.

“ஹாய்! உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். எப்படி இருக்கிங்க?” என்றாள் கவிதா.

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? லன்ஞ் முடிச்சாச்சா?”

கவிதாவின் வயிற்றுக்குள் எலிக்குஞ்சுகள் ஓடிவிளையாடு போல் இருந்தது. அப்படி ஒரு பசி. காலையில் சிற்றுண்டி உண்டவள்தான். மணி மூன்றாகிவிட்டது. இன்னும் மதிய உணவு உட்கொள்ளவில்லை.

“நான் சாப்பிட்டுட்டேன். நீங்க சாப்பிட்டிங்களா?” என்றாள் பசியை மறைத்துக்கொண்டு.

“நானும் சாப்பிட்டுட்டேன். இன்னிக்கு உங்க பேமிலி பத்தி சொல்றேன்னு சொன்னிங்களே?”

“கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடி, நீங்க இன்னும் உங்க நிஜப் பேரை சொல்லலையே?”

“J நவநீதன்”

“ஓ, ஸ்வீட் நேம்.”

“தேங்ஸ். உங்களுக்கு அழகான பெயர். கவிதையைப் போலவே,” என்றான் நவநீதன்.

“நன்றி. உங்கள எப்படிக் கூப்பிடறது? நவா’ன்னு சொல்லலாமா இல்ல நீதன்’னு சொல்லலாமா?”

“உங்க இஷ்டம். வீட்ல எல்லாரும் நீதன்’னு கூப்பிடுவாங்க. ப்பிரண்ஸ் எல்லாரும் நவா’ன்னுதான் கூப்பிடுவாங்க.”

“அப்படியா. அப்ப நானும் உங்கள நவா’ன்னு கூப்பிடலாமா?”

“கூப்பிடலாம். ஆனா, அதுல ஒரு சின்ன சிக்கல்… என் தம்பி பேரு நவனேஸ்வரன். அவனையும் நவா’னுதான் சுருக்கமா கூப்பிடுவாங்க. நீங்க என்ன நீதன்’னே கூப்பிடலாம்.”

“தேங்ஸ் நீதன் J. உங்க பேமிலிய பத்தி சொல்லுங்களேன்.”

“நீங்க இன்னும் உங்க பேமிலியப் பத்தி சொல்லவே இல்லையே? இன்னைக்குச் சொல்றதா அன்னிக்கு சாட் பண்ணும் போது சொன்னீங்களே?”

“ஆமாம்… நீங்க தப்பா நினைச்சுக்கலனா நான் இன்னொரு நாள் சொல்லலாமா? நாம இன்னும் கொஞ்ச நாள் நல்லா சாட் பண்ணிப் ப்பிரண்ஸ்’சா ஆயிறலாமே?”

“ஹ்ம்ம்…. சரி. உங்க இஷ்டம். நான் உங்கள வற்புறுத்தல. இன்னிக்கு என்ன பேசலாம்?”

“சாரி. ஏற்கனவே லேட்டாயிடுச்சு. வீட்ல தேடுவாங்க. மூனு மணிக்குக் கிளாஸ் முடியும்’னு சொல்லியிருந்தேன். இப்ப போயாகணும். நாம அடுத்த வாரம் சாட் பண்ணலாமா?”

“அடுத்த வாரமா? கிழமை? நேரம்?”

“வழக்கம் போல புதன்கிழமை. ஆனா, கரேட்டா ரெண்டு மணிக்கு வந்திரணும்! இன்னிக்கு மாதிரி லேட்டாகிடாதீங்க. சரியா?”

“கண்டிப்பா வந்திருவேன். அப்படி ஏதாவது தடங்கல் வந்துச்சுன்னா உங்களுக்கு இ-மெயில் அனுப்புறேன்.”

“தேங்ஸ். அடுத்த வாரம் சாட் பண்ணுவோம். உங்களோட பேசுனதுல சந்தோஷம்.”

“எனக்கும் தான். தேக் கேர்.”

“தேக் கேர். பாய்…”

“பாய் கவிதா…”

உரையாடல் முடிந்தது. மணி மூன்று முப்பதாகிவிட்டது. கவிதாவிற்குக் காற்றில் மிதப்பது போல இருந்தது. தனக்குத் தானே சிரித்துக்கொண்டு அந்தக் கணினி மையத்தை விட்டு வெளியேறினாள். பேருந்து நிற்கும் இடத்தை நோக்கிச் சென்றாள். இருப்பினும் அவள் மனதில் கொஞ்சம் வருத்தம். ‘ச்சே, அவர் சீக்கிரமே வந்திருந்தா ரொம்பெ நேரம் சாட் பண்ணியிருக்கலாம். பரவால, எப்படியோ வந்து சேர்ந்துட்டார். அதுவரைக்கும் சந்தோஷம்!’.

கவிதாவின் மனம் ஒரு நிலையாக இல்லை. எதை எதையோ நினைத்தாள்… தனியாக சிரித்தாள். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது, பேருந்து வந்தப்பாடில்லை. எவ்வளவு நேரம் அவள் அங்கு அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. கவிதா கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். திடீரென சுயநினைவுப் பெற்றவள் போல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் மிரண்டன…

தொடரும்…

9 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

இரண்டாம் பாகம்

வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\. திடீரென சுயநினைவுப் பெற்றவள் போல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் மிரண்டன…\\

ஆஹா நல்ல ‘தொடரும்’ ...

புதியவன் சொன்னது…

யதார்த்தமான உரையாடலில்
கதை நன்கு பணிக்கிறது தொடரட்டும்...

Sathis Kumar சொன்னது…

இறுதி வரிகள் பயமுறுத்துகின்றன.. அடுத்து என்ன? படிக்க ஆவலாய் உள்ளேன்.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்...

A N A N T H E N சொன்னது…

//அவளது விரல்கள் மின்னலை விட வேகமாக அச்சுப்பலகையில் விளையாடத் தொடங்கின//
உவமை நல்லாருக்கு

//“ஹாய் கவி! சாரி போர் தெ லேட். சொன்ன நேரத்துக்கு வர முடியல. உங்கள ரொம்பெ நேரம் காக்க வச்சுட்டேன். மன்னிச்சிருங்க,”//
அடப்பாவி… இவ்வளவு நீட்டா நீ எழுதி முடிச்சி அனுப்புறதுக்குள்ள அவ கிளம்பிடாள்னா? ஒரு வேளை இத எழுதத்தான் ஒரு மணி நேரமாச்சோ?

//கவிதாவின் கண்களை அப்போது ஏதாவது கவிஞர் பார்த்திருந்தால் ஒரு கோடி கவிதைகள் எழுதித் தள்ளியிருப்பார்.//
கவிஞர் எல்லாம் ரொம்ப நல்லவங்க, கவிதையோட நிப்பாட்டிக்கிறாங்க… சினிமாக்காரங்கத்தான் தப்பு தப்பா சொல்லி தராங்க… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//“கூப்பிடலாம். ஆனா, அதுல ஒரு சின்ன சிக்கல்… என் தம்பி பேரு நவனேஸ்வரன். அவனையும் நவா’னுதான் சுருக்கமா கூப்பிடுவாங்க. நீங்க என்ன நீதன்’னே கூப்பிடலாம்.”//
குழப்பமான குடும்பம் போல

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
அதிரை ஜமாலின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

புதியவனின் கருத்துக்கு நன்றி. உங்கள் ஆதரவுத் தொடர்ந்தால், கதையும் தொடரும்.

சதீசு குமார் பயப்பட வேண்டாம். பயப்படும்படி ஒன்றும் நடக்காது.

து. பவனேஸ்வரி சொன்னது…

அனந்தன் அவர்களின் கருத்துக்கு நன்றி. நம்ம ஹீரோவை அப்படியெல்லாம் எடைப் போட்டுறாதீங்க. அவர் டைப்பிங்'ல கவிதாவை விட வேகம். கவிஞர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்தான்.
என்னங்க நீங்க? அதுக்குள்ள குழப்பான குடும்பம்'னு முடிவு பண்ணிட்டீங்க? குடும்பம் எப்படின்னு இதுக்கு மேல தானே தெரியும்?

A N A N T H E N சொன்னது…

//குடும்பம் எப்படின்னு இதுக்கு மேல தானே தெரியும்? //
ஹீரோ குடும்பத்துக்கு ஒரு இண்ட்ரோ இருக்கா? அதுக்கும் சஷ்பென் வெச்சிடப் போறிங்க... ஹீரோ அம்புட்டு சீக்கிரமாவா எழுதுவாரு.... நீங்க சொல்லவே இல்லியே?