புதன், 24 டிசம்பர், 2008

எங்கே செல்லும்…?


“ஏய், ஸ்கூல் முடிஞ்சி எங்கப் போற? எங்க வீட்டுக்கு வர்றியா?” என்றவாறு புத்தகப்பையை மூட்டைக்கட்டினாள் தேவி.

“சாரி டார்லிங். இன்னைக்கு முக்கியமான அப்பாய்மெண்ட் இருக்கு. ஒரு ப்பிரண் கூட சாட் பண்றதா சொல்லியிருக்கேன். நான் போயே ஆகணும்,” என்று உறுதியுடன் கூறினாள் கவிதா.

“ஹ்ம்ம்… வர வர அடிக்கடி சாட்டிங் பண்றே. என்ன நடக்குதுன்னே தெரியல. வெறும் ப்பிரண் தானே? எனக்குத் தெரியாம ஒன்னும் செய்யலையே?” என்றால் தேவி.

“உன்கிட்ட சொல்லாம ஏதாவது செய்வேனே. ஜஸ்ட் ப்பிரண் தான். கவலைப்படாதே. ஏதாவது இருந்தா கண்டிப்பாக உங்கிட்டதான் மொதல்ல சொல்லுவேன். ஒ. கே. வா?” என்று கவிதா தன் வாக்கியத்தை முடிக்கும் முன் பள்ளி மணி அடித்தது.

மாணவர்கள் குதூகலமாக புத்தகப்பைகளைத் தூக்கிக்கொண்டு பள்ளியறைகளிலிருந்து வெளியாகினர். அப்பப்பா…என்ன குதூகலம்! அதோ தேவியும் கவிதாவும். தேவி மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வர கவிதா அவள் அருகே நடந்து வருகிறாள். பள்ளி முன் வாசலை நெருங்கியவுடன் தேவி மிதிவண்டியில் ஏறிப் புறப்படுகிறாள்.

கவிதா முகத்தில் புன்முறுவல் ததும்ப பள்ளி அருகே இருக்கும் கணினி மையத்தில் நுழைகிறாள். அவளுக்கு ஒரே அவசரம். விறுவிறுவென்று இணையத்திள் நுழைந்து சாட்டிங் அறைக்குள் பிரவேசிக்கிறாள். ஒரே படபடப்பு!

‘அவர் எனக்கு முன்னமே வந்து விட்டாரா? மணி இரண்டாகிவிட்டதே? எவ்வளவு நேரம் காத்திருந்தாரோ? எங்கே அவர் பெயரைக் காணவில்லையே? ஒருவேளை வேறு பெயர் பயன்படுத்துகிறாரோ?’ கவிதாவின் மனம் பலவாறு சிந்தித்தது.

அவள் தேடி வந்த நண்பரின் பெயர் அந்தப் பெயர் பட்டியலில் இல்லை. கவிதாவின் முகத்தில் ஏமாற்றம். தன்னுடன் உரையாட வந்தவர்களையும் சட்டை செய்யாது பெயர் பட்டியலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் அங்கு வந்து ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டன. இன்னும் அவள் எதிர்ப்பார்த்த நண்பர் வந்துச் சேரவில்லை. கவிதாவின் முகமும் மனமும் சோர்வுற ஆரம்பித்தது.

‘அவர் வரவே மாட்டாரோ? ஒருவேளை மறந்துவிட்டாரோ? திங்கட்கிழமை பேசலாம் என்று சொன்னேனே. சரி என்றுதானே சொன்னார். இன்னும் சிறிது நேரம் காத்திருந்துப் பார்க்கலாமா?’

மணி மூன்றாகிவிட்டது. கவிதா காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தாள். அவள் எழுந்திருக்க முயன்றபோது…


தொடரும்….

9 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

எங்கே செல்லும் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\மணி மூன்றாகிவிட்டது. கவிதா காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தாள். அவள் எழுந்திருக்க முயன்றபோது…

தொடரும்….\\

இப்படியா வைப்பது சஸ்பன்ஸ்

அருமைங்க ...

logu.. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
logu.. சொன்னது…

\\Hellow..
ithenna chinna pulla thanama..

thodarumnu...

nalaikke vanthu kathaiya mudinga..\\

logu.. சொன்னது…

kathai nallathaan
irukku..

thodarumnu pottathuthaan
nallalla..

நான் சொன்னது…

கவிதாவின் ஏக்கத்தை விடவும் எங்களை திகைபோடு காத்திருக்க வைத்துவிட்டீர்கள்

புதியவன் சொன்னது…

கதை நல்ல போகுது அடுத்த பகுதியை சீக்கிரம் போட்டு விடுங்கள்...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்... தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
நன்றி.

A N A N T H E N சொன்னது…

ஓ... இது சாட்டிங் கதையா? ஹ்ம்ம் முக்கியமான இடத்துல நிறுத்தி இருக்கிங்க...