பந்தமாம் பாசமாம்
பந்தாவில் குறைச்சலில்லை
பணத்தில் நேர்மையில்லை
பாசத்தில் உண்மையில்லை!
போலியான பாசத்தைக் காட்டி
பணத்தைக் கறக்கும் காலமிது
பாசமெனும் கயிரைக் கட்டி
பல மனிதனை இழுக்கும் உலகமிது!
பெண்ணின் பாசம் வேசமடா
ஆணின் பாசம் மோசமடா
பெற்றோர் பாசம் கடமையடா
பக்தனின் பாசம் பக்தியடா!
பாவிகள் நிறைந்த உலகத்திலே
பாசத்தைச் தேடுதல் மடமையடா
பாசம் என்பது உள்ளத்திலே
பரவிக் கிடக்கும் உணர்ச்சியடா!
பந்தம் பாசம் எல்லாமே
தன்னால் வந்தால் பெருமையடா
பணத்தைப் பார்த்து வருவதென்றால்
அதுவே உனக்கு எதிரியடா!
8 கருத்துகள்:
கவிதை நன்று.
கவிதை முழுவதும் ஒரு வித விரக்த்தி தெரிகிறது காரணம் என்னவோ...?
நன்கு உள்ளது :-)
தமிழ் மணத்தில் இணத்துவிட்டீர்களா?
இதானே வேணாங்கிறது எப்ப பார்த்தாலும் 'டா' போடு எழுதிகிட்டு... நான் அதை எல்லாம் 'டீ' போட்டு படிச்சிகிட்டேன்...
நல்லா இருக்கு... வாழ்த்துகள்...
\\பந்தமாம் பாசமாம்
பந்தாவில் குறைச்சலில்லை
பணத்தில் நேர்மையில்லை
பாசத்தில் உண்மையில்லை!\\
இது தான் அடிச்சி ஆட்ரதுன்னு சொல்றாங்களோ.
சும்மா வார்த்தைகள் கொட்டுதே...
வணக்கம்,
புதியவன் அவர்களே, கவிதையில் காணப்படும் விரக்தியின் காரணத்தை உண்மையாகவே தங்களால் அறிய முடியவில்லையா? பாசம் வேசமாகும் போது விரக்தி ஏற்படுவது சகஜம் தானே?
இனியவள் புனிதாவின் கருத்துக்கு நன்றி. தமிழ் மணம் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? மன்னிக்கவும். புதிய வரவாக இருப்பதனால், நீங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லை.
விக்னேஸ்வரன் அவர்களுக்குப் பெண்கள் மேல் என்ன கோபம்? 'டா' போடுவதனால் உங்கள் உணர்ச்சிகள் பாதிக்கப்படுகிறதா?
அதிரை ஜமாஸ், அதென்ன அடிச்சி ஆட்ரது? எனக்குப் புரியவில்லை...
பெண்ணின் பாசம் வேசமடா
மன்னிக்கவும் தவறான வரிகள்
ஆணின் பாசம் மோசமடா
முக்கால் பங்கு உண்மை
வணக்கம்,
நான் கூறியது...
பெண்ணின் பாசம் வேசமடா
மன்னிக்கவும் தவறான வரிகள்
தவறாக இருப்பின் மன்னிக்கவும். மனதில் தோன்றியதையே எழுதினேன்.
கருத்துரையிடுக