நடந்தேன் கோணல் என்றார்கள்
படித்தேன் பைத்தியம் என்றார்கள்
தவித்தேன் நடிப்பு என்றார்கள்
முறைத்தேன் திமிர் என்றார்கள்!
சிரித்தேன் நெனப்பு என்றார்கள்
அழுதேன் காரியக்காரி என்றார்கள்
தூங்கினேன் சோம்பேறி என்றார்கள்
ஆடினேன் கூத்தாடி என்றார்கள்!
பேசினேன் தப்பு என்றார்கள்
அமைதியாக என் வேலையை
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்
சுயநலவாதி என்றார்கள்!
படித்தேன் பைத்தியம் என்றார்கள்
தவித்தேன் நடிப்பு என்றார்கள்
முறைத்தேன் திமிர் என்றார்கள்!
சிரித்தேன் நெனப்பு என்றார்கள்
அழுதேன் காரியக்காரி என்றார்கள்
தூங்கினேன் சோம்பேறி என்றார்கள்
ஆடினேன் கூத்தாடி என்றார்கள்!
பேசினேன் தப்பு என்றார்கள்
அமைதியாக என் வேலையை
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்
சுயநலவாதி என்றார்கள்!
11 கருத்துகள்:
மிகவும் அழகாகச் சொன்னீர்கள்...
\\நடந்தேன் கோணல் என்றார்கள்
படித்தேன் பைத்தியம் என்றார்கள்
தவித்தேன் நடிப்பு என்றார்கள்
முறைத்தேன் திமிர் என்றார்கள்!
சிரித்தேன் நெனப்பு என்றார்கள்
அழுதேன் காரியக்காரி என்றார்கள்
தூங்கினேன் சோம்பேறி என்றார்கள்
ஆடினேன் கூத்தாடி என்றார்கள்!
பேசினேன் தப்பு என்றார்கள்
அமைதியாக என் வேலையை
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்
சுயநலவாதி என்றார்கள்!\\
மனிதர்களை மட்டுமே கணக்கில் கொள்ளுங்கள்
முன்னால் போனால் கடிக்கும்
பின்னால் போனால் உதைக்கும் இம் மாதிரி கழுதைகளை விட்டுவிடுங்கள்.
Wordings r nice.
இன்னும் ஆயிரம் சொல்வார்கள் நாம் நம் வேலையை நமக்காக செய்யலாம்
//பேசினேன் தப்பு என்றார்கள்
அமைதியாக என் வேலையை
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்
சுயநலவாதி என்றார்கள்!//
வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் வையகம் இது. இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை தோழி. நமக்கு சரியெனப் பட்டதை சரியாகச் செய்வோம்...
கவிதை கருத்தோடு அழகாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் து. பவனேஸ்வரி. வாழ்த்துக்கள்.
வணக்கம்,
இனியவள் புனிதாவின் கருத்துக்கு நன்றி.
அதிரை ஜமாஸ்,கழுதைகளின் கூட்டத்தில் மனிதர்களைத் தேடுவது சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. மனிதர்களெல்லாம் மிருகங்களாக மாறிக்கொண்டிருக்கும் கலிகாலத்தில் அல்லவா நாம் இருக்கின்றோம்?
முனியப்பனின் வரவையும் கருத்தையும் வரவேற்கிறோம்.
நான் அவர்களே, ஆயிரம் அல்ல இயன்றால் கோடியும் சொல்வார்கள். ஊர் வாயை மூட உலை மூடி இல்லையே? :(
புதியவன் அவர்களே, மக்கள் கூட்டத்தின் நடுவே அல்லவா நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்? அவர்களது பேச்சையும் ஏச்சையும் பற்றி கவலைக்கொள்ளாது எப்படி வாழ்வது?
//புதியவன் அவர்களே, மக்கள் கூட்டத்தின் நடுவே அல்லவா நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்? அவர்களது பேச்சையும் ஏச்சையும் பற்றி கவலைக்கொள்ளாது எப்படி வாழ்வது?//
வாழலாம் தோழி அப்படி வாழ்ந்தவர்கள் தான் சாதனை படைத்துள்ளனர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். பிராமணர் அல்லாதோருக்கு பூனூல் போட்டு விட்ட பாரதியை தூற்றியவர்கள் தான் பிறகு அவரை தம் இனம் என்று போற்றி வருகின்றனர்...சாதனைகளுக்கும் சரித்திரத்திற்கும் ஆண் பெண் என்ற பேதம் இல்லை...இதுவும் நம் உலகம் தான்...
வணக்கம் புதியவன்,
இப்பொழுது பாரதியைப் போற்றுபவர்கள், அவர் வாழ்ந்த காலத்தில் தூற்றியதை நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். வாழும் போது கிடைக்காத அங்கீகாரம் இறந்தபின் எதற்கு?
//து. பவனேஸ்வரி said...
வணக்கம் புதியவன்,
இப்பொழுது பாரதியைப் போற்றுபவர்கள், அவர் வாழ்ந்த காலத்தில் தூற்றியதை நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். வாழும் போது கிடைக்காத அங்கீகாரம் இறந்தபின் எதற்கு?//
அவர் வாழும் போது அவருக்கு அங்கீகாரம் கிடைத்து இருந்தால் அவர் இந்த அளவிற்கு புரட்சிக் கவிகளை படைத்திருப்பாரா என்று என்னால் சொல்ல முடியவில்லை. எதிர்ப்ப இருந்தால் தான் எதிர் நீச்சல் போடமுடியும். முட்டை ஓட்டின் தடையை உடைத்தால் தான் கோழிக்குஞ்சினால் வெளியுலகம் காணமுடியும்.
ஒரு மரம் வேர்விட்டு வளர்ந்து விருட்சமாகி நிழல் கொடுப்பதற்கு பல வருடங்களாகிறது. நாம் விதைக்கும் போது இது நமக்கு மட்டும் நிழல் கொடுத்தால் போதும் என்று யாரும் நினப்பதில்லை நாம் இறந்த பின்னும் அது பலருக்கும் நிழல் கொடுக்கும் என்ற பொது நலம் எல்லோர் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது தோழி...
அருமை... அருமை...
வைரமுத்து கூட சொல்லி இருக்காரு...
அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்
உலகின் வாயை தைத்திடு
அல்லது இரண்டு செவிகளை
இருக்கி மூடிடு...
உலகின் வாயை தைப்பது கடினம்..
உனது செவிகள் மூடுதல் சுலபம்...
வணக்கம்,
புதியவன் கருத்துக்கு நன்றி. ஹ்ம்ம்ம்... தாங்கள் கூறுவது உண்மைதான். இருப்பினும் ஏதோ ஒன்று....
விக்னேஸ்வரன்,
"கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்"
அருமையான வரிகள்...
"உலகின் வாயை தைப்பது கடினம்..
உனது செவிகள் மூடுதல் சுலபம்..."
முற்றிலும் உண்மை. கவிதைக்கு நன்றி...
கருத்துரையிடுக