செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

என்னைச் சேர்வாயா?



காதலை விட கொடிய ஆயுதம்
அவனியில் வேறெதுவும் இல்லை
ஈவிரக்கமின்றி கதறக் கதற
உயிரோடு கொன்று புதைக்கின்றதே!

பேதை நான் என்ன செய்வேன்
ஏனடா உன்னைச் சந்தித்தேன்
உன்னுடன் கதைக்காமல்
உறக்கம் கூட வரமாட்டேன் என்கிறது!

உலாவலாம் என்று கடற்கரைச் சென்றேன்
‘துணை எங்கே?’ என்று முழு நிலா கேட்கிறது
உறங்கலாம் என்று பொம்மையை அணைத்தேன்
‘இப்பொழுது மட்டும் தேவையா?’ என்று முறைக்கிறது!

ஒரு பக்கம் இன்பமாகவும்
மறுபக்கம் துன்பமாகவும்
இரு பக்கமும் குழப்பமாக
தீர்வு காணாத நமது உறவு!

நான் என்ன செய்ய வேண்டும்
எப்படி இருக்க வேண்டும்
எது செய்தால் பிடிக்கும்
ஏதாவது சொன்னால் தானே தெரியும்?

இந்த உணர்ச்சி எனக்குப் பிடிக்கவில்லை
சில வேளைகளில் பிடிக்கிறது
சில வேளைகளில் வெறுப்பாய் உள்ளது
மொத்தத்தில் பைத்தியம் பிடிக்கிறது!

பசிக்கிறது, உண்ண முடியவில்லை
நித்திரை வருகிறது உறங்க முடியவில்லை
கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது
கண்ணீர் கூட வரமாட்டேன் என்கிறது!

அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டதடா
இனி அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது
பெண்களின் கடைசி ஆயுதத்தையும் இழந்து
உன்னிடம் எவ்வாறு காதலை நிரூபிப்பேன்?

உன் மனதில் என்னதான் இருக்கிறது?
நான் வேண்டுமா, இல்லை வேண்டாமா?
முடிவாக கூறாமல் இழுபறி செய்கின்றாய்
பதிலேதும் கூறாமல் என்னை நீ கொல்கின்றாய்!

விலகி இருக்கவும் முடியாமல்
நெருங்கி வரமும் இயலாமல்
இந்த உறவிற்குப் பெயரும் தெரியாமல்
விழி பிதுங்கி வழி மறந்து நிற்கிறேன்!

கடந்து வந்த பாதைகளில்
விழுந்து எழுந்து பின் மீண்டும் விழுந்து
இப்படியே அடிப்பட்டு இரணப்பட்டு
ஆறாத வடுக்களுடன் தீராத ஆசைகளுடன் நான்!

தாய், தந்தை, அண்ணன், தம்பி
அனைவர் மீதும் வைக்க வேண்டிய அன்பை
ஒட்டுமொத்தமாக உன் மீது வைத்துவிட்டு
இப்போது வாடித் துடிக்கின்றேன்!

எதற்காகக் கோபிக்கின்றாய்
என்னதான் நினைக்கின்றாய்
ஒன்றுமே புரியாத, புரிந்துக்கொள்ள முடியாத
முட்டாளாய் நான்!

நான் பேசிய காதல் வார்த்தைகள் சத்தியம்
உன் மீது கொண்ட அன்பு நித்தியம்
அது அமுதசுரபி போல் பெருகுமே அன்றி
ஒரு நாளும் தேய்ந்து மறையாது!

எனக்குள் என்றுமே நீ இருப்பாய்
நீ என்னை வெறுத்தாலும் கூட
என்னுயிரோடு உயிராய், சுவாசமாய், ஆவியாய்
என்னுள்ளே நீ வியாபித்திருப்பது உண்மை!

உன்னைக் கோபிக்கக்கூட முடியவில்லை
கதைக்காத நில நிமிடங்கள் கூட வருடங்களாய்
உன் நினைவுகள் என்னை கொஞ்சம் கொஞ்சமாய்
இரத்தம் சொட்டச் சொட்ட அறுத்தெறிகின்றன!

உறக்கமில்லா இரவுகளில்
தவிர்க்க முடியா எண்ணங்களால்
பசலைப் பூத்து வாடுகிறேன்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்!

வாக்கொன்று கொடுப்பாயா
வருத்தத்தைத் துடைப்பாயா
கரம் பிடித்துச் செல்வாயா
பாதியிலே மறைவாயா?

உனக்காக நான் இருப்பேன்
இறக்கும் வரை பார்த்திருப்பேன்
காதல் ஒன்று வந்ததென்றால்
சொல்லிவிடு வந்திடுவேன்!

வெகுதூரம் இருப்பதனால்
நம்பிக்கை நீ இழக்காதே
காதலிக்கும் பாவையர்க்கு
கடலும் சிறு துளியே!

உன்னோடு நான் வாழ
என்னோடு நீ கூட
நாம் வாழும் வாழ்க்கையை
சரித்திரமும் கூறிடுமே!

நீரில்லாமல் மீனில்லை
கடலில்லாமல் அலைகளில்லை
ஊடல் இல்லாத காதல் இல்லை
நீ இல்லாது வாழ்க்கை இல்லை!

ஒரு கணம் இறக்கிறேன்
மறு கணம் பிறக்கிறேன்
இவ்வாறு இறப்பும் பிறப்பும் அருளிய
கண் கண்ட தெய்வம் நீயல்லவா?

கனத்த இதயத்தோடு காத்திருக்கிறேன்
நிறைந்த எதிர்ப்பார்ப்போடு பார்த்திருக்கிறேன்
உடலின் கடைசி இரத்தம் காயும் முன்பே
உயிரே என்னைச் சேர்வாயா?

அமைதியாய் இருப்பது ஏனோ?



மிச்சமிருந்த உணர்வுகளும்
இன்று அடக்கம் செய்யப்பட்டுவிட்டன
இதயத்தில் இருந்த சிறிதளவு ஈரமும்
இன்று காய்ந்துப் போய்விட்டது!

வலிகளைத் தாங்கித் தாங்கி
இருதயம் மரத்துப் போய்விட்டது
ஏமாற்றங்களைச் இடைவிடாது சந்தித்து
உயிர் நொந்துப் போய்விட்டது!

என்னை வெறுக்கிறேன் என்று
ஒவ்வொரு முறை நீ கூறும் போதும்
இதயம் சுக்கு நூறாய் உடைந்து
பின் ஒட்டப்பட்டு மீண்டும் உடைகின்றது!

விளையாட்டாய் ஒருமுறைக் கூறலாம்
கதைக்கும் போதெல்லாம் கூறுகிறாய்
என்னை வெறுக்கிறேன் என்று
இயல்பாகக் கூறுகின்றாய்!

வெறுக்கும் அளவிற்கு
நான் செய்த தவறுதான் என்ன?
பெண்ணாய் பிறந்தது தவறா?
அல்ல உம்மீது அன்பு கொண்டது தவறா?

யாரை நான் குறைசொல்வேன்?
யாரிடம் ஆறுதல் தேடுவேன்?
எங்குப் போய் முறையிடுவேன்?
எவரிடத்தில் பகிர்ந்துக்கொள்வேன்?

அழகாகத் தெரிவதெல்லாம்
அவஸ்தையில் முடிவது ஏனோ?
என் அகம் உனக்குத் தெரிந்திருந்தும்
அமைதியாய் இருப்பது ஏனோ?

திங்கள், 21 பிப்ரவரி, 2011

உடல் இங்கே உயிர் அங்கே



விரும்புகிறேன்
உன்னை விரும்புகிறேன்
உன்னோடு சேர்ந்து வாழ
மிகவும் விரும்புகிறேன்!

சொந்தம் என்ன சொல்லுமோ
பந்தம் என்னை இகழுமோ
குடும்பத்தில் உன்னைப் பிடிக்குமோ
கரம் பிடிக்கக் கூடுமோ?

உடல் மட்டும் இங்கே
உயிர் உன்னோடு அங்கே
இதயம் மட்டும் இங்கே
நினைவுகளெல்லாம் அங்கே!

காலங்கள் வேகமாய்
இறக்கைக் கொண்டு பறக்குமா
நம் வயதுதான் சீக்கிரம்
ஏணி வைத்து ஏறுமா?

இறுதிவரை உன் காதல்
மாறாமல் வளருமா?
காலங்கள் கடந்த பின்னர்
சலித்துப் போய் தேயுமா?

அச்சமாக உள்ளதே
மனதில் ஆசை துள்ளுதே
உன் நினைவு வாட்டுதே
காதல் என்னைக் கொல்லுதே!

என்னருகில் நீ வேண்டும்
உன் தோளில் சாயவேண்டும்
உன்னருகில் நான் வேண்டும்
என் மடியில் உறங்க வேண்டும்!

குழந்தைப் போல் உன்னை
செல்லமாய் கொஞ்ச வேண்டும்
உன் மனதில் என்றுமே
நான் மட்டும் இருக்க வேண்டும்!

எனக்கு நீ வேண்டும்
உனக்குள் நான் வேண்டும்
ஈருடல் ஓருயிராய்
என்றுமே வாழ வேண்டும்!

கனவுகள் வருதே
தனிமையில் சுடுதே
பகலெல்லாம் உறைகிறதே
இரவெல்லாம் கரைகிறதே!

மனதினிலே சிலுசிலுப்பு
கனவினிலே சலசலப்பு
இமைகளில் துடிதுடிப்பு
இதயத்தில் படபடப்பு!

சாகும் வரை உன் காதல்
உறுதியாய் இருக்குமா?
எதிர்ப்புகள் வந்தாலும்
சமாளித்து நிற்குமா?

சனி, 19 பிப்ரவரி, 2011

இறுதிவரை நீளுமா..?

இதயச்சுவற்றில் என்னை
எழுத மறந்தவனே
உன் உயிரோடு உயிராக
என்னுயிரைக் கலப்பாயா?

அடியோடு உன்னை
மறக்கவும் முடியவில்லை
உரிமையோடு உன்னை
நினைக்கவும் முடியவில்லை!

அலைபாய்கிறது உள்ளம்
அடக்க நினைக்கிறது நெஞ்சம்
ஆசைகள் ஆயிரம் ஆயிரமாய்
இதயத்தின் ஓரத்திலே!

இது வயதுக் கோளாரா
பருவ விளையாட்டா
அறியாத பொருளா
சுகமான சுமையா?

உன்னைப் போல் ஒருவனை
இதுவரையில் கண்டதில்லை
உள்ளத்தின் ஆசைகளை
ஒருமுறையும் சொன்னதில்லை!

காணாத ஏக்கங்கள்
நெஞ்சோடு தீருமா?
உன் அன்பான ஆறுதல்
இறுதிவரை நீளுமா?

புதன், 12 ஜனவரி, 2011

என்னை நான் வெறுக்கிறேன்!




என் தமிழச்சியே
உன்னை நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது!

இனத்திற்காகப் போராடியது உன் குற்றமா?
இறுதிவரை ஆயுதம் கூட ஏந்தவில்லையே நீ
உன்னை சீரழிக்க எப்படி மனம் வந்தது அவர்களுக்கு?

நாளிதழ், இணையம், சஞ்சிகை
எவ்விடம் நோக்கிலும் உமது புகைப்படம்
உயிரற்ற பிணமாய், சிதைக்கப்பட்ட பூவாய் நீ

நீ பேசுவதே பாடுவது போல் இருக்குமாமே?
எம் தலைவன் சீமான் கூறியதாகப் படித்தேன்
அதனைக் கேட்கும் பாக்கியத்தை இழந்து விட்டேனே!

பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினார்களா உன்னை?
ஐயகோ, நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றதே
எப்படித் துடித்திருப்பாய் நீ?

பச்சிளம் குழந்தைக்குத் தாயானவளே
எத்தனைச் செய்திகளைச் சேகரித்திருப்பாய்
இன்று உலகத் தமிழர்களின்  துக்கச் செய்தியாய் ஆகிவிட்டாயே!

உன்னைக் காப்பாற்ற ஒருவரும் வரவில்லையே
எந்நாட்டு அரசியலும் தலையிடவில்லையே
தமிழ்நாடு கூட குரல் கொடுக்கவில்லையே!

இயலாமையும் ஆற்றாமையும்
வெட்கித் தலைகுனியச் செய்கிறது என்னை
நானும் தமிழச்சியா?

நித்தம் அலங்காரம் செய்து
விதவிதமாய் உடைஉடுத்தி
ஊர் ஊராய் சுற்றுகிறேன் நான்!

அழுகுப்படாமல் வேலை செய்து
குளிர்சாதன அறையில் ஓய்வெடுத்து
சமயங்களில் கும்மாளமும்  போடுகிறேன் நண்பர்களோடு!

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஈழத்தில் எம் உறவுகள்
நானோ, கண்டதையும் தின்றுவிட்டு
கம்பீரமாய் அலைகின்றேன்!

என்னை நினைத்து நானே வெட்கிறேன்
உன் கால் தூசுக்கு சமமாகமாட்டேன்
நான் போற்றும் பெண்மையடி நீ!

என்ன செய்வேன் என்ன செய்வேன்?
தனித் தாய் ஈழத்தை வென்றெடுக்க
நான் என்ன செய்வேன்?

பயனற்ற ஜடமாய் இருக்கின்றேன் தாயே
எம் உறவுகளின் பிணங்களை எண்ணி எண்ணி
எமது நாட்களும் கடந்துக்கொண்டே செல்கின்றன!

எமது இனம் என் கண் முன்னே அழிக்கப்படுகிறது
திரைப்படம் பார்ப்பது போல்- நான்
அதனைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்!

அழிக்காதே என்று குரல் கொடுக்க அதிகாரம் இல்லை
‘சுட்டால் நானும் சுடுவேன்’ என்பதற்குத் தோட்டாக்களும் இல்லை
கல் கொண்டு அடிப்பதற்குக் கூட நான் ஈழத்தில் இல்லை

வாய்க்கிழியப் பேசிக்கொண்டும்
பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டும் மட்டுமே இருக்கின்றேன்
செயலில் நான் கூட சுழியம் தான்

என் தமிழச்சியே
தமிழ் இனத்திற்கே அவமானச் சின்னமாய் நான்
எமது இனத்தைக் காப்பாற்ற முடியாத பிண்டமாய்!

இப்படியொரு இன அழிப்பு நிகழ்ந்தது-என
என் சந்ததியினருக்கு வெட்கமில்லாமல் சொல்வதற்கா
நான் உயிர் வாழ்கிறேன்?

இசைப்பிரியா
இயலாமை என்னை உயிரோடு கொல்கிறது
கூனிக் குறுகி நிற்கிறேன் நான்!

உன்னையும் எம் இனத்தையும் காப்பாற்ற இயலாத
ஒட்டுமொத்த அவமானத்தின் சின்னமாய் நான்
இன்னமும் உயிர் வாழ்கிறேன், என்னையே வெறுத்து!


திங்கள், 20 டிசம்பர், 2010

தூற்றுவார் தூற்றட்டும்!


வாழ்த்துகளுக்கு மதி மயங்கிப் போவதும்
வசை மொழிகளால் மனமுடைந்து போவதும்
எழுத்துக்களுக்கு வடிகால் போடுவதும்
பழக்கமில்லை எமக்கு!

முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொண்டு
அனைத்தும் அறிந்தவன் போல் பேசிக்கொண்டு
கொச்சைத் தமிழில் எழுதிக்கொண்டு
மார் தட்டுகிறாய் எம் இனத்தைக் கொன்று!

காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும்
‘கருநாய்நிதி’ வழி வந்த உமக்கு சகஜம்தான்
வால் பிடிப்பதும் கால் பிடிப்பதும்
பிரபாகரன் வழி வந்த எமக்கு பழக்கமில்லை!

உன் ஆதாரமற்ற பேச்சுக்கு
ஆத்திரப்பட்டு அறிவிழப்பேன் என்றோ
கவலைக் கொண்டு கண்ணீர் வடிப்பேன் என்றோ
எம் பிழை என்று மன்றாடுவேன் என்றோ நினைத்தாயோ?

உன் கூறுகெட்ட எழுத்தே
தப்பான தலைவன் பக்கம் நீ நிற்பதை
மேளம் கொட்டி தாளம் தட்டி
கூப்பாடு போட்டுச் சொல்கிறதே!

யாருக்கு வேண்டும் உன் குடியுரிமை?
குடிகெடுக்கும் தலைவனுக்கு ஓட்டுப் போட்டு
இலவசப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு
இன மான உணர்வை அடகு வைக்கவா?

இந்தியன் என்ற சொல்லைவிட
தமிழன் என்று சொல்லி
தலை நிமிர்ந்து மார் தட்டி
உலகெங்கும் சுற்றுவேன் நான்!

கருத்தே இல்லாத உன் கருத்துகளை
நான் நீக்கப்போவதும் இல்லை
அதனால் மனம் உடைந்து எம் எழுத்துகளை
நிறுத்தப் போவதும் இல்லை!

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
அது எண்ணிக்கை இல்லா கணக்கு
கவலை இல்லை எமக்கு!

வியாழன், 16 டிசம்பர், 2010

கருநாய்நிதி!


கிழட்டுப் பயலே கருநாய்நிதி!
இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா?
பொட்டியில் போகும் வயதில்
உனக்கு நாற்காலி ஆசை ஏன்?

என்ன சாதித்தாய் நீ?
எம் இனம் படுகொலை செய்யப்படுவதை
கைக்கட்டி வாய்பொத்தி இரசித்தவன் தானே நீ!
உன்னை எவனடா தமிழனத் தலைவன் என்று சொன்னது?

போராடு இல்லையே செத்துமடி
நாற்காலிக்காக மேடைப் போட்டு கூவும் நீ
எம்மினம் அழிக்கப்படும் போது
அறிக்கை விட்டு படம் காட்டினாயா?

செம்மொழி மாநாடு கொண்டாடினால்
சரித்திரம் உன்னைப் புகழும் என்று கனவு கண்டாயோ?
இனத்தை அழித்த பழியும் பாவமும்
உன்னை ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வருமடா!

தமிழ் அறிஞன் என்று உன்னை மதித்திருந்தேன்
பின்புதான் அறிந்தேன் நீ கொலைஞன் என்பதை!
நீயும் உன் பரம்பரையும் ஆள்வதற்கு
எம்மினம் பலிகாடா?

ராஜபக்சே நரிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
எம் தலைவன் சீமானுக்கு சிறைக்கம்பிகளா?
கேட்பதற்கு ஆளில்லை என்று ஆடித் திரிகிறாயோ?
சாகும் வயதிலும் நன்றாய் நடிக்கிறாய் நாடகம்

உனது முதலைக் கண்ணீரை நம்புவதற்கு
நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல
வயதுக்கு ஏற்ற நடத்தை உன்னிடம் இல்லை
தலைவன் என்பவனின் தகுதி அறவே இல்லை!

உன் குடும்ப அரசியலும் குப்பைத் தொட்டி கட்சியும்
தந்திரக்காரி சோனியாவின் குச்சுப்புடி ஆட்டத்திற்கு
தாளம் போட்டு மேளம் வாசிப்பதை- நாங்கள்
அமைதியாய் இரசிப்போம் என்று நினைத்தாயோ?

நீ உண்மையில் மனிதன்தானா?
மலைபோல் உன்னைத்தானே நம்பியிருந்தார்கள்
கத்தினார்கள் கதறினார்கள்- எம்
சகோதரிகள் கற்பிழந்தார்கள்!

நீயோ பெட்டையின் பாவாடையில்
பொட்டைப் போல் ஒளிந்துக் கொண்டாய்
பின்பு அனுதாப அறிக்கை விட்டு
படம் காட்டினாய்!

உனது அரசியல் இலாபத்திற்காக
சொந்த இனத்தையே பலி கொடுத்தாய்
உனக்கெல்லாம் எதற்கடா முதல்வர் பதவி
எமது தலைவன் பிரபாகரனின் மூ#$% நீ குடி!

இன்னமும் அடங்கவில்லை எமது ஆத்திரம்!
கண்டாயா சிங்களவனின் போர்க்குற்றங்களை?
பார்! உன் கறுப்புக் கண்ணாடியைத் துடைத்துவிட்டு
தெளிவாகப் பார் ; பார்த்து சந்தோஷப்படு!

சந்தோஷத்தில் மதிமயங்கிவிடாதே
ஜெயாவோடு மேடைச் சண்டை போடவேண்டுமே?
தூற்றுவதற்கு வார்த்தைகள் தேட நேரம் தேவைப்படும்
உனது குடும்ப அரசியலுக்கு அதிக நேரம் தேவை!

கிழட்டு நாயே எப்போது சாவாய் நீ?
உன் பெயரைக் கேட்டாலே
காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிறது!
நீ இருப்பதை விட இறப்பதே மேல்!

உனக்கு மான ரோஷம் கிடையாதா?
எவ்வளவு கேட்டாலும் உன் பின் பக்கத்தை
நாற்காலியோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறாய்
எந்த நேரத்தில் பிறந்தாயடா நீ?


‘தலைவன்’ என்ற பதவிக்கும்
‘தமிழன்’ என்ற பெருமைக்கும்
இழுக்கு சேர்க்கும் நீ
பிறக்கவே கூடாதா ஓர் ஈனப் பிறவி!